ETV Bharat / state

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நெகிழி தடை விழிப்புணர்வு! - plastic awareness

சேலம்: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு எடப்பாடி நகராட்சி நிர்வாகம் சார்பாக நெகிழி தடை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

காந்தி ஜெயந்தி
author img

By

Published : Oct 3, 2019, 7:39 AM IST

தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, நிலம், நீர் ஆகியவை மாசு அடைவதைத் தடுக்கும் வகையிலும், கால்நடை உயிரினங்களைக் காப்பாற்றும் நோக்கிலும் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மகாத்மா காந்தி பிறந்த நாளான இன்று எடப்பாடி பேருந்து நிலையத்தில் தூய்மை பாரதம் திட்டப் பணிகளின் ஒரு பகுதியாக எடப்பாடி நகராட்சி சார்பில், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழி தடை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் மற்றும் சுகாதார அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நெகிழி தடை விழிப்புணர்வு

தொடர்ந்து, நகரின் அனைத்துப் பகுதிகளிலும் ஒட்டுமொத்த நெகிழிக் கழிவுகள் சேகரிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. அதில் மொத்தம் 102 கிலோ பயன்படுத்திய நெகிழிக் கழிவுகளும் ஏழு கிலோ நெகிழிப் பைகள் கடைகளிலிருந்தும் பறிமுதல் செய்யப்பட்டன.

பேருந்து நிலைய பகுதிகளில் நெகிழிப் பைகளை பயன்படுத்திய பொதுமக்களுக்கு துணிப்பைகளை பயன்படுத்திட வலியுறுத்தி துணிப்பைகள் நகராட்சி சார்பில் வழங்கப்பட்டன.

இதையும் படிக்கலாமே: காந்தி 150: ஈடிவி பாரத்தின் காந்தி சிறப்புப் பாடல்

Intro: எடப்பாடி பேருந்து நிலையத்தில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பிளாஸ்டிக் தடை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது ‌.Body:
தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாத்து, நிலம் நீர் ஆகியவை மாசுபாடு அடைவதைத் தடுக்கும் வகையில் கால்நடை உயிரினங்களைக் காப்பாற்றும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக மகாத்மா காந்தி பிறந்த நாளான இன்று இடைப்பாடி பேருந்து நிலையத்தில் தூய்மை பாரதம் திட்டம் பணிகளின் ஒரு பகுதியாக இடைப்பாடி நகராட்சி சார்பில், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் தடை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது.

தொடர்ந்து, நகரின் அனைத்துப் பகுதிகளிலும் ஒட்டுமொத்த பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

இடைப்பாடி நகராட்சி பகுதிகளில் பயன்படுத்திய பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு, மொத்தம் 102 கிலோ பயன்படுத்திய பிளாஸ்டிக் கழிவுகளும், 7 கிலோ பிளாஸ்டிக் பைகள் கடைகளில் இருந்து பறிமுதலும் செய்யப்பட்டது.

பேருந்து நிலைய பகுதிகளில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய பொதுமக்களுக்கு துணிப்பைகளை பயன்படுத்திட வலியுறுத்தி துணிப்பைகள் நகராட்சி சார்பில் வழங்கப்பட்டது.Conclusion:மேலும், இடைப்பாடி நகராட்சி ஏரிரோடு பகுதிகளில் கொட்டப்பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டது .

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் மற்றும் சுகாதார அலுவலர்கள் சுகாதார ஆய்வாளர்கள் நகராட்சி அனைத்து நிலை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.