ETV Bharat / state

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா..? - எடப்பாடி பழனிசாமி ரியாக்‌ஷன் என்ன? - Do not take money for votes

நடிகர் விஜய் பள்ளி மாணவர்களுக்கு விருது வழங்கிய விழாவில், 'ஓட்டுக்கு பணம் வாங்க வேண்டாம்' என பேசியது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, 'ஜனநாயக நாட்டில் கருத்து சொல்வதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு' என்று பதிலளித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 18, 2023, 6:57 PM IST

சேலம்: ஆத்தூரில் 500-க்கும் மேற்பட்டோர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணையும் விழா இன்று (ஜூன் 18) நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் இணைந்தவர்களுக்கு வாழ்த்துகள் கூறினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "ஒரு ஊழல் செய்த அமைச்சரை, அவர் எந்த கட்சியாக இருந்தாலும் சரி; ஊழல் வழக்கில் கைதான ஒருவரை தொடர்ந்து அமைச்சர் பதவியில் வைத்திருப்பது மிகவும் தவறு என்றார். கடந்த கால வரலாற்றில், கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, அமைச்சராக இருந்த ஆலடி அருணாஒரு வழக்கில் சம்பந்தப்பட்டபோது, அவர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்றும் அதேபோல, என்.கே.பி.ராஜா நில அபகரிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட போது, அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி நினைவுப்படுத்தினார்.

அதேபோல, ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியின் போது, அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது ஒரு வழக்கு வந்தபோது, அவரும் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்பது எல்லாம் வரலாறு என்றார். இவ்வாறு தமிழகத்திற்கு என்று தனி அரசியல் நாகரீகம் உள்ளதாகவும், அதனை கடைபிடிக்க வேண்டும் என்றும் அப்போது தான் மக்கள் அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை கொள்வார்கள் என்றார்.

ஆனால், தற்போதைய திமுக ஆட்சியில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறை கைது எண் பெற்றப் பிறகும் அவர் அமைச்சராக தொடர்வார் என்று அறிவிப்பது ஒரு மோசமான உதாரணமாக பார்ப்பதாகவும், அவரை ஒரு அமைச்சராக தொடர்வது எப்படி நல்லா இருக்குமென எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பியுள்ளார். அரசியல் நாகரீகம் தெரிந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அரசியல் நாகரீகம் கருதி அவரை அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.

தேர்தலின் போது, மக்கள் யாரும் வாக்களிக்க பணம் வாங்கக் கூடாதென பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய் பேசியிருப்பதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இது ஒரு ஜனநாயக நாடு என்றும், இங்கு எல்லோருக்கும் அவரவர் கருத்தை சொல்லுவதற்கு உரிமையுண்டு என்றும், இதனடிப்படையில் விஜய் அவரது கருத்தை மக்களுக்கு தெரிவித்துள்ளதாக' எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். நீட் தேர்விற்கு பிள்ளையார் சுழி போட்டதே திமுக- காங்கிரஸ் கட்சிகள் தான் என்றார்‌. இந்த நிகழ்ச்சியில் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கரன், சேலம் அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் உள்ளிட்ட அதிமுக பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விஜய்யின் அட்வைஸ்: ஓட்டுக்கு பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என உங்கள் பெற்றோர்களிடம் கூறுங்கள் என நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். 2023 ஆம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த பள்ளி மாணவ மாணவியகளுக்கு விருது வழங்கும் விழா சென்னை தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த விழாவில் பேசிய நடிகர் விஜய் ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். இது விஜய்யின் இந்த பேச்சு அரசியல் ஆயத்தமா? ஜனநாயகம் மீதான அக்கறையா? என்று தமிழ்நாடெங்கும் பேசுபொருளாகி உள்ளது.

இதையும் படிங்க: நடிகர் விஜயின் அரசியல் பேச்சு - தளபதி தலைவர் ஆவாரா..?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.