சேலம் மாவட்டம் எடப்பாடி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் (பாமக), திமுகவின் தற்போதைய மாநில விவசாய தொழிலாளர் அணி இணைச் செயலாளருமான காவேரி தனது ஆதரவாளர்களுடன் இன்று (மார்ச் 23) சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
அப்போது பேசிய காவேரி, ”ஒரு உழவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கிறார். அவர் உழவர்களின் மனநிலையை நன்கு புரிந்துகொண்டவர். அவரே மீண்டும் முதலமைச்சராக வருவார். அவருக்கு எனது ஆதரவைத் தெரிவித்து பரப்புரை செய்வேன்.
வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. எடப்பாடி பழனிசாமி உழவர்களின் முதலமைச்சர். அவரே தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர்" என்றார்.
இதேபோல தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் முன்னாள் சேலம் மாவட்டச் செயலாளர் மு. முத்து தனது ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
இதையும் படிங்க: கோவிட்-19 நிலவரம்: ஒரேநாளில் 40,715 பேருக்குப் பாதிப்பு