முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இரண்டு நாள் பயணமாக சென்னையிலிருந்து சேலம் வந்துள்ளார்.
அங்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அதில் அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர். அப்போது, கரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்புப் பணி, நிவாரண உதவித் தொகை, குடிமராமத்துப் பணிகள், குடிநீர் திட்டப்பணிகள் உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, எடப்பாடியில் உள்ள பயணியர் மாளிகையில் முதலமைச்சர் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். கூட்டத்தின்போது எடப்பாடி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட அதிமுக நிர்வாகிகளுக்கு கரோனா நிவாரணப் பொருட்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிமுக நிர்வாகிகள் அனைவரும் முகக் கவசம் அணிந்து, தகுந்த இடைவெளியை பின்பற்றி நிவாரண பொருட்களை பெற்றுச் சென்றனர்.
இதையும் படிங்க: ஆர்.எஸ். பாரதியை கண்டிப்பதுதான் ஸ்டாலினுக்கு அழகு' - முதலமைச்சர் அறிவுரை