சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட செட்டிமாங்குறிச்சியில் உள்ள புது ஏரியை தூர்வார, குடிமராமத்து திட்டத்தின் கீழ் 6 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
தமிழ்நாட்டு அரசு குடிமராமத்து திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கி ஏரி, குளங்களைத் தூர்வாரும் பணியைச் செய்து வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட செட்டிமாங்குறிச்சியில் உள்ள புது ஏரியை தூர்வாரும் பணியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
6 லட்சம் ரூபாய் செலவில் 15 ஏக்கர் பரப்பளவில் இந்த ஏரி தூர்வாரப்பட இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், தலைமைச் செயலாளர் சண்முகம், மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.