கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக மத்திய மாநில அரசுகள், நாடு முழுவதும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 21 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
குறிப்பாக, வாழப்பாடி அடுத்துள்ள பேளூர் பகுதியில் கரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. ஒரே பகுதியில் கரோனா பாதிக்கப்பட்டு 4 நபர் உயிரிழந்த நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பேளூர் பேரூராட்சி நிர்வாகம் தீவிரமாக நடைமுறைப்படுத்தி உள்ளது.
அதன்படி, இன்று முதல் வரும் அக்டோபர் 15ஆம் தேதிவரை ஏழு நாள்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்படும் என மக்கள் புரிந்துணர்வுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இன்று அங்கு உள்ள அனைத்து வகையான கடைகளும் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவை அடுத்து பேளூர் கிராம மக்கள் தாமாகவே முன்வந்து அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:ஊரடங்கு விதிமீறல் - 4 ஆயிரத்து 214 நபர்கள் மீது வழக்குபதிவு