சேலம் மக்களவை உறுப்பினர் பார்த்திபன், கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினர் தெய்வசிகாமணி, தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில் குமார், நாமக்கல் மக்களவை உறுப்பினர் சின்ராஜ் ஆகியோர் இன்று(ஆகஸ்ட் 3) சேலம் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து, சேலம் - சென்னை எட்டு வழி சாலை திட்டம் தொடர்பாக மனு அளித்தனர்.
விவசாயிகள், பொதுமக்களின் நலனைக் கருத்திற்கொண்டு சேலம் - சென்னை எட்டு வழி சாலை திட்டத்தை நிறைவேற்றக் கூடாது. ஏற்கனவே உள்ள இரண்டு வழிச்சாலைகளை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என அந்த மனுவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சேலம் மக்களவை உறுப்பினர் பார்த்திபன் கூறுகையில், "ஏற்கனவே பலமுறை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சேலம்-சென்னை எட்டு வழி சாலை திட்டத்தை நிறைவேற்றக் கூடாது. அப்படி நிறைவேற்றினால் பல ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு விவசாயத்தை நம்பி வாழ்கிற ஐந்து மாவட்ட விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும் என்று வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் ஏழை விவசாயிகளின் வாழ்வை கவனத்தில் கொள்ளாமல் மத்திய மாநில அரசுகள் 8 வழி சாலை திட்டத்தை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்று செயல்படுகிறது.
நீதிமன்ற வழிகாட்டுதல்களையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் பத்தாயிரம் கோடி ரூபாயில் இந்த திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவது வேதனை அளிக்கக்கூடிய விஷயம்.
எப்போதுமே விவசாயிகளின் பக்கம் நிற்கும் திமுக தொடர்ந்து எட்டு வழி சாலை திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்பதிலும் விவசாயிகளின் பக்கமே நிற்கிறது.
எட்டு வழி சாலை திட்டத்திற்கு பதிலாக மாற்று வழிகளில் ஏற்கனவே உள்ள இரண்டு வழி சாலைகளை நான்கு வழிச்சாலையாக மாற்ற மத்திய மாநில அரசுகள் முன்வர வேண்டும்.
கரோனா தடை காலத்தில் கூட ஊழல் செய்வதற்காகவே மத்திய மாநில அரசுகள் ரூபாய் 10 ஆயிரம் கோடியில் எட்டு வழி சாலை திட்டத்தை நிறைவேற்ற துடிக்கின்றன. இதனை திமுக வன்மையாக கண்டிக்கிறது” என்றார்.
எட்டு வழி சாலை திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த திமுக மக்களவை உறுப்பினர்களுக்கு இத்திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நேரில் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
ஊழல் செய்யவே எட்டு வழி சாலை திட்டம்: திமுக எம்பிகள் குற்றச்சாட்டு
சேலம்: எட்டு வழி சாலைத் திட்டம் ஊழல் செய்வதற்காகவே செயல்படுத்தப்பட உள்ளதாக திமுக மக்களவை உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.