தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலத்தில் மக்கள் பொருள்கள், இனிப்புகள், பட்டாசு, துணிமணிகள் வாங்க அதிகளவில் குவிய தொடங்கியுள்ளனர். இதனால் ஆங்காங்கே சாலை நெரிசல் ஏற்பட்டு, மக்கள் பெரும் அவதிக்குள்ளாகிவருகின்றனர்.
கரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. நோய்ப்பரவல் தடுப்பு நடவடிக்கைக்குப் பிறகு ஊரடங்கு தளர்வு காரணமாக மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர்.
ஆனால் இதுவே தற்போது பேராபத்தை விளைவிக்க வழிவகை செய்துள்ளது. அதிகளவில் மக்கள் கூடுவதால், தகுந்த இடைவெளி கேள்விக்குறியாகியுள்ளது.
இந்நிலையில் வெளியூர் செல்லும் பயணிகள் அதிகளவில் வருகைபுரிவது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தாலும், கரோனா பரவல் தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றி உரிய நடவடிக்கைகளை மாநில நிர்வாகம் மேற்கொண்டுவருவதால் பயணிகள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை.
மக்கள் தங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடுவது எவ்வளவு அவசியமோ அதைவிட தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் அவசியம். இதைக் கருத்தில்கொண்டு பொதுமக்கள் செயல்பட வேண்டும்.