சேலம் செவ்வாய் பேட்டை பகுதியில் மாவட்ட அளவிலான யோகா போட்டி நடைபெற்றது. இதில் 6 முதல் 60 வயது உடையவர்கள் வரை இந்த போட்டி நடத்தப்பட்டது. மாவட்டம் முழுவதும் உள்ள 30 பள்ளிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். யோகாவில் ஏராளமான வகைகள் உள்ள போதிலும் இந்த போட்டிக்கு என 14 ஆசனங்கள் மட்டும் கையாளப்பட்டன.
இதில் ஒவ்வொரு போட்டியாளரும் மூன்று ஆசனங்களைச் செய்ய வேண்டும் என்பது போட்டியின் விதி, அதற்கு ஏற்றார்போல் போட்டியில் கலந்துகொண்ட மாணவ- மாணவிகள் ஆசனங்கள் செய்தனர். போட்டியில் கலந்துகொண்ட பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை ஆர்வத்துடன் உற்சாகப்படுத்தினர்.
இந்த போட்டியில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் தங்களது உடலை வில்லாக வளைத்து யோகா ஆசனங்களை செய்து அசத்தினர்.இதில் ஒவ்வொறு ஆசனத்தையும் பிழை இல்லாமல் செய்த மாணவ-மாணவிகளுக்கு பரிசு கோப்பைகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டன. இதில் வெற்றி பெறும் மாணவ மாணவிகள் சேலத்தில் விரைவில் நடைபெற உள்ள மாநில அளவிலான யோகா போட்டியில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சேலத்தில் 20,490 புகார் மனுக்கள் வந்துள்ளன! காவல் ஆணையர் தகவல்