சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த சீரங்க கவுண்டம்பாளையம் பகுதியில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இதே பகுதியைச் சேர்ந்த முதலமைச்சரின் உறவினர்கள் தங்களது விளை நிலத்தற்கு காவிரி ஆற்றில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் எடுக்க அனுமதி பெற்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சாலையில் குழி தோண்ட பொக்லைன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் பொதுமக்களை தாக்கியதாக தெரிகிறது.
தற்போது சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.எம். செல்வ கணபதி பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் அவர் பேசுகையில், "சீரங்க கவுண்டம்பாளையத்தில் மிகப்பெரிய அராஜகம் நடந்துள்ளது. முதலமைச்சரின் உறவினர்களுக்காக பொதுமக்களை காவல் துறையினர் தாக்கியுள்ளனர். இதனை திமுக வன்மையாக கண்டிக்கிறது" என்றார்.
இதையும் படிங்க: வேலூரில் தலைமை காவலரை செங்கல்லால் தாக்கிய இருவர் கைது