ETV Bharat / state

அரசு விழாவில் மயங்கி விழுந்த ஓய்வு பெற்ற ஊழியர் உயிரிழப்பு - சேலத்தில் சோகம்

சேலம்: அமைச்சர்கள் கலந்துகொண்ட ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான பண பலன்கள் வழங்கும் விழாவில் போக்குவரத்து ஊழியர் ஒருவர் மயங்கி விழுந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒய்வுப்பெற்ற ஊழியர் உயிரிழப்பு
author img

By

Published : Sep 22, 2019, 9:06 PM IST

சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தின் கோட்ட அலுவலகத்தில், ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான பண பலன்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்காக சேலம் மற்றும் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்றவர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் காலையிலேயே வரவழைக்கப்பட்டனர்.

இதேபோல் தருமபுரி மாவட்டம், கடத்தூர் பகுதியைச் சேர்ந்த மணியும் கலந்துகொண்டார். அப்போது விழா நடந்து கொண்டிருக்கும் போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதைப் பார்த்த காவலர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவலறிந்து வந்த மணியின் உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதது பார்ப்பவர்களை மனம் உருக வைத்தது.

ஒய்வுப்பெற்ற ஊழியர் உடலைப்பார்த்து கதறி அழும் உறவினர்கள்

இதையும் படிங்க: தேர்தல் விதியை மீறிய அரசு உழியர்கள்: அமைச்சருக்கு சால்வை அணிவித்து கவுரவிப்பு!

Intro:சேலத்தில் அமைச்சர்கள் பங்கேற்ற ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான பண பலன்கள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக ஊழியர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு.Body:சேலத்தில் அமைச்சர்கள் பங்கேற்ற ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான பண பலன்கள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக ஊழியர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு.

சேலம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் பரிதாபமாக உயிர் இழந்த சோகம்.

சேலம் ராமகிருஷ்ண சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தின் கோட்ட அலுவலகத்தில் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான பண பலன்கள் வழங்கும் விழா இன்று மதியம் நடைபெறுவதாக அறிவிக்கபட்டு இருந்தது. இந்த விழாவில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன், உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்றவர்கள் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் காலையிலேயே வரவழைக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் அமைச்சர்களை வரவேற்க மேள தாளங்கள் அடித்தும், ஒலி பெருக்கியில் கூடுதல் சப்தம் வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த விழாவில் பங்கேற்று பண பலன்கள் பெறுவதற்காக தர்மபுரி மாவட்டம் கடத்தூர் பகுதியில் இருந்து வந்து இருந்த ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர் மணி, விழா நடந்து கொண்டிருக்கும் போதே சோர்வுடன் காணப்பட்டார். தொடர்ந்து விழா முடிவடையும் தருவாயில் அவர் மயங்கி விழுந்தார். இதனையடுத்து அருகே இருந்தவர்கள் அவரை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஓய்வு பெற்ற ஓட்டுனர் மணி உயிர் இழந்தார். இது குறித்த தகவல் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர்கள் மருத்துவமனைக்கு வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.

ஓய்வு பெற்றவர்களை காத்திருக்க வைத்ததன் காரணமாக ஓய்வு பெற்ற ஓட்டுனர் ஒருவர் உயிர் இழந்த சம்பவம் போக்குவரத்து தொழிலாளர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.