இது தொடர்பாக சேலத்தில் இன்று தென் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சண்முகப்பா மற்றும் தலைவர் குமாரசாமி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாட்டில் ஓடும் லாரிகளுக்கு வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்து வருகின்றன. இதுகுறித்து பலமுறை தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கைகள் வைத்தும் அவை நிறைவேற்றப்படவில்லை.
அதேபோல் லாரிகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதிலும் பல சிக்கல்களை அரசு ஏற்படுத்தியுள்ளது. விலை அதிகம் கொடுத்து வாங்கி ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டிய நிலை இருக்கிறது. மத்திய அரசின் அறிவிப்பின்படி ஜிபிஎஸ் கருவிகள் பொருத்துப்படுவதிலும் லாரி உரிமையாளர்களுக்கு பல நெருக்கடிகளை கொடுத்து ஊழல் நடக்க தமிழ்நாடு போக்குவரத்துத் துறை துணை போகிறது.
மத்திய அரசு வாகனங்களுக்கு லோடு ஏற்றும் அளவை விளக்கத்துடன் அறிவித்த நிலையில், பிற மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் லஞ்சம் பெற்றுக்கொண்டு வாகனங்களில் அதிக பாரம் ஏற்ற அனுமதி கொடுத்துவிடுகின்றனர். இதனால், விபத்துக்கள் அதிகம் ஏற்படுகின்றன. அதிக அளவிலான பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகள் தமிழ்நாட்டிலிருந்து, வெளி மாநிலங்களுக்கு செல்லும்போது அபராதம் விதிக்கப்படுகிறது.
இதுபோன்ற பல்வேறு விதமான குளறுபடிகளை தமிழ்நாடு அரசு செய்து லாரி போக்குவரத்து தொழிலில் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. இவற்றையெல்லாம் முதலமைச்சர் பழனிசாமி களைந்து லாரி உரிமையாளர்கள் கரோனா காலத்தில் அடைந்த நஷ்டத்தில் இருந்து மீள்வதற்கு உதவி செய்திட வேண்டும்" என்றனர்
இதையும் படிங்க: குடியரசுத்தலைவருடன் சரத் பவார் சந்திப்பு: வேளாண் சட்டம் குறித்து பேச்சுவார்த்தை