சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து எஸ்.பி. சிவகுமார் பாண்டே தலைமையில் வந்துள்ள துணை ராணுவப் படையினர், மாநகர மற்றும் மாவட்ட பகுதிகளில் இரு பிரிவாக பிரிந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
இது குறித்து நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், “90 பேர் சேலம் மாநகர பகுதியில் உள்ள மூன்று தொகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இவர்கள் மாநகர காவல்துறை சமுதாயக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்ட பகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் இதர துணை ராணுவப் படையினர், ஓமலூர் அருகேயுள்ள, தனியார் பொறியியல் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்” என்றார்.
இதையும் படிங்க: 'கோவாக்ஸின்' கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிரதமர் மோடி