ETV Bharat / state

சேலம் சின்னப்பம்பட்டியில் 'நடராஜன் கிரிக்கெட் மைதானம்' - ஜூன் 23ம் தேதி திறப்பு! - Chinnappampatti Natarajan Cricket Ground

சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டியில் 'நடராஜன் கிரிக்கெட் மைதானம்' என்ற பெயரில் கிரிக்கெட் மைதானத்தை திறக்க உள்ளதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் அறிவித்துள்ளார்.

சின்னப்பம்பட்டியில் கிரிக்கெட் மைதானம் - தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் அறிவிப்பு

author img

By

Published : Jun 11, 2023, 11:05 AM IST

சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்தவர், கிரிக்கெட் வீரர் தங்கராசு நடராஜன். 32 வயதான நடராஜன், இடது கை வேகப்பந்து வீசுவதில் வல்லவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்த இவர், ஐபிஎல் கிரிக்கெட்டில் கடந்த 2017ஆம் ஆண்டில் விளையாடத் தொடங்கினார்.

இதனையடுத்து, கடந்த 2018ஆம் ஆண்டு முதல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். டொமஸ்டிக் கிரிக்கெட்டில் 2015ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அணிக்காக விளையாடி வருகிறார். அது மட்டுமல்லாமல், கடந்த 2020ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய நாட்டுக்கு சுற்றுப் பயணம் சென்ற நடராஜன், அதன் மூலம் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்தார்.

ஒரு நாள் கிரிக்கெட், டி20 கிரிக்கெட், டெஸ்ட் கிரிக்கெட் என மூன்று வகையான கிரிக்கெட்டிலும் அதே பயணத்தில் அறிமுக வீரராக விளையாடினார். கடைசியாக கடந்த 2021ஆம் ஆண்டில் அவர் இந்திய அணிக்காக விளையாடி இருந்தார். இவ்வாறு கிரிக்கெட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நடராஜன், தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் ‘நடராஜன் கிரிக்கெட் மைதானம்’ என்ற பெயரில் கிரிக்கெட் மைதானத்தை நிறுவி உள்ளார்.

  • Extremely delighted to announce the opening of my dream-come-true project- Natarajan Cricket Ground.
    - 23rd of June, 2023
    - Chinnappampatti, Salem District pic.twitter.com/Mj4yRswYuz

    — Natarajan (@Natarajan_91) June 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதன் தொடக்க விழா வருகிற 23ஆம் தேதி நடைபெறும் என நடராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவ்வாறு நடைபெற உள்ள மைதானத்தின் திறப்பு விழாவில் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் அசோக் சிகாமணி, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கெளரவத் தலைவர் பழனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ கே.எஸ்.விஸ்வநாதன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளர் ராமசாமி, நடிகர் யோகி பாபு மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

மேலும், இது தொடர்பாக நடராஜன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “எனது கனவாகிய திட்டமான ‘நடராஜன் கிரிக்கெட் மைதானம்’ திறப்பு விழாவை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் வருகிற ஜூன் 23ஆம் தேதி இதன் திறப்பு விழா நடைபெற உள்ளது.

இந்த திறப்பு விழாவிற்கு நடராஜன் கிரிக்கெட் அகாடமியின் உறுப்பினர்கள் சார்பாக வரவேற்கிறோம். புதிதாக திறக்க உள்ள இந்த கிரிக்கெட் மைதானத்தை இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் திறந்து வைக்க உள்ளார்” என தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல், கடந்த சில மாதங்களாக மைதானம் தயாராகும் பதிவுகளை நடராஜன் ட்விட்டரில் வெளியிட்டு வந்தார். முன்னதாக, தேனி மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் புதிய கிரிக்கெட் மைதானங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தேனியில் இருந்து இந்திய கிரிக்கெட் அணிக்கு வீரர்கள் வருவார்கள் - வருண் சக்கரவர்த்தி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.