ETV Bharat / state

சேலத்தில் தம்பதி உடல்கள் மீட்பு - salem tamil news

சேலம்: தம்பதி உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலத்தில் குழந்தையுடன் தம்பதி உடல்கள் மீட்பு

author img

By

Published : May 15, 2021, 11:00 PM IST

சேலம் மாவட்டம், தாதகாப்பட்டி அடுத்த மூனாங்கரடு பகுதியைச் சேர்ந்தவர்கள், கோபிநாத் (31) - பவித்ரா (28) தம்பதி. இவர்களுக்கு நந்திதா (5) என்ற குழந்தை இருந்தார். கோபிநாத் செவ்வாய்பேட்டையில் உள்ள ஸ்வீட் கடையில் கணக்காளராகப் பணிபுரிந்து வந்தார்.

கடந்த மே 9ஆம் தேதி உடல்நிலை சரியில்லாத நிலையில், கோபிநாத் அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மேற்கொண்டார். பரிசோதனையில் கரோனா தொற்று இல்லை எனத் தெரியவந்தது. இதையடுத்து வீட்டில் இருந்த கோபிநாத்திற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று (மே.14) முதல் அவரது வீடு திறக்காத நிலையில் இருந்தது. இன்று (மே.15) மதியம் கோபிநாத்தின் தாய், வீட்டிற்குச் சென்று பார்த்தார்.

அப்போது குழந்தை உயிரிழந்து தரையில் கிடந்தது. தம்பதி தூக்கிட்ட நிலையில் சடலமாக இருந்தனர். உடனே அதிர்ச்சியடைந்த அவரது தாய் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தார்.

அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சடலங்களை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்களது உயிரிழப்பு குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: குடும்பத்தகராறு காரணமாக கணவன் - மனைவி தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.