தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு , சாரல் கலை இலக்கிய மன்றம், மனித உரிமை கல்வி நிறுவனம் சார்பில் ஆத்தூர் பகுதியில் கரோனா ஊரடங்கு காலத்தில், நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த 165 முதியோர்கள், 122 தாழ்த்தப்பட்ட மக்கள், 68 தூய்மைப் பணியாளர்கள், 50 கணவரை இழந்த பெண்கள் என மொத்தம் 405 மக்களுக்கு உணவு பொருள்கள் வழங்கப்பட்டது . மேலும், கணவரை இழந்த பெண்களுக்கு 500 ரூபாய் மதிப்பிலான மளிகை பொருள்களும், மூன்று கிலோ அரிசியும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஜெகதாம்பாள், சாரல் கலை இலக்கிய மன்றத்தின் நிறுவனர் சுகுணன், ஆசிரியர் சங்கத்தின் மாநில பொறுப்பாளர் முருகன் , மனித உரிமை கல்வி நிறுவனத்தில் மாவட்ட அமைப்பாளர் ராமு , பெண்கள் அமைப்பின் பொறுப்பாளர் கவிதா, தொழிலாளர் அமைப்பின் பொறுப்பாளர் மோகன் ஆகியோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: தூய்மை பணியாளர்களுக்கு எம்எல்ஏ நிவாரணம்