சேலம்: மாவட்ட இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் கரோனா பெருந்தொற்றினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு நிலையான மாதச்சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் பிறப் பணியாளர்களுக்கு கரோனா கால நிவாரண உதவித்தொகையாக தலா ரூ.4,000, 10 கிலோ அரிசி உள்ளிட்ட 15 வகையான மளிகைப்பொருட்களை மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் வழங்கினார்.
சேலம் சுகவனேஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கூறுகையில்,
'தமிழ்நாடு முழுவதும் திருக்கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் பிறப் பணியாளர்களுக்கு கரோனா நிவாரணத் தொகை வழங்கிட வேண்டுமென ஆணையிட்டார்.
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கோயில் பணியாளர்களுக்கு நிவாரணம்:
அதன்படி சேலம் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் நிலையான மாதச்சம்பளமின்றி பணியாற்றுவோருக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் முகமது சபிர் ஆலம், சேலம் வருவாய்க் கோட்டாட்சியர் சி.விஷ்ணுவர்த்தினி, சேலம் வருவாய் வட்டாட்சியர் கோபால கிருஷ்ணன், சேலம் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் தா.உமாதேவி, சேலம் அருள்மிகு சுகவனேஸ்வரர் திருக்கோயில் உதவி ஆணையர் நா.சரவணன் உட்பட செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள், அர்ச்சகர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: 'தடுப்பூசி பாரபட்சத்தின் மூலம் திமுக அரசை அடிமையாக்க நினைக்கும் பாஜக' - முத்தரசன்