தமிழ்நாட்டில் கரோனா வைரஸால் பதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் முழுவதும் ஜூலை14 ஆம் தேதி ஒரே நாளில் 4 ஆயிரத்து 526 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 67 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
அதன் ஒருபகுதியாக சேலம் மாவட்டத்தில் நேற்று புதிதாக 58 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்முலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை கடந்துள்ளது.
இதனிடையே சேலம் அரசு மருத்துவமனையில், கரோனா சிகிச்சை பெற்று வந்த 17 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். இதுவரை சேலம் அரசு மருத்துவமனை பதிவின்படி 2,026 பேர் கரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ளதாகவும் அவர்களில் , 1024 பேர் பூரண நலம் பெற்று வீடு திரும்பினர் என்றும் அரசு மருத்துவமனை முதல்வர் தகவல் தெரிவித்துள்ளார்.