சேலம் மாவட்டத்தில் கரோனோ வைரஸ் நோய்த்தொற்று பாதிப்பாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.
எனினும், இதுவரை சேலம் மாவட்டம் ஏற்காடு சுற்றுலா தளத்தில் நோய்த்தொற்றால் ஒருவர் கூட பாதிக்கப்படாத நிலை இருந்தது.
இந்நிலையில், கடந்த 25ஆம் தேதி ஏற்காட்டுக்கு பெங்களூருவிலிருந்து பெண் ஒருவர் வந்துள்ளார். இந்தப் பெண், மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தால் எந்த ஒரு பரிசோதனைக்கும் உட்படுத்தாமல் ஏற்காட்டிற்கு வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இவர் ஏற்காடு காய்கறி சந்தை, இறைச்சிக் கடைகளுக்கும் சென்றுள்ளார். இந்த நிலையில் இவருக்கு ஏற்காட்டில் மருத்துவ குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர்.
அப்போது, இவருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இவர் சென்ற இடம், இவர்களுடன் தொடர்பு இருந்த நபர்கள் என 73 நபர்களுக்கு நோய்த்தோற்று பரிசோதனை மருத்துவ குழுவினர் மேற்கொண்டனர்.
இதில் மூன்று நபர்களுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் இவர்கள் மூன்று நபர்களும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்காடு பகுதியிலும் கரோனா நோய்த்தொற்று பரவி உள்ளது அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஏ.கே.வி. வெளியே, அகர்வால் உள்ளே! இரவோடு இரவாக காவல்துறையில் அதிரடி மாற்றம்