சேலம் மாநகர், மாவட்டத்தின் பிற பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்துவந்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை, கடந்த இரண்டு நாள்களாக குறைய தொடங்கியுள்ளது.
அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் நேற்று (செப். 06) 122 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 12,654ஆக அதிகரித்துள்ளது.
அதில், சேலம் மாநகராட்சியில் 81, இளம்பிள்ளை 6, கொங்கணாபுரம் 1, மகுடஞ்சாவடி 2, மேச்சேரி 2, மேட்டூர் 1, ஓமலூர் 3, சங்ககிரி 2, தாரமங்கலம் 3, ஆத்தூர் 2, அயோத்தியாப்பட்டணம் 7, கெங்கவல்லி 5, தலைவாசல் 1, வாழப்பாடி 1 என 121 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதர மாவட்டமான விழுப்புரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
மேலும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த 45 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இதனால் மாவட்டம் முழுவதும் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 9,380ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் சிகிச்சைப் பலனின்றி 10 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 156ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:5 மாதங்களுக்குப் பிறகு மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!