சேலம் அழகாபுரம் ஏ.டி.சி. நகரைச் சேர்ந்த ஒருவர் நேற்று, பெண் வன்கொடுமை சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டார். அதையடுத்து அவர் இரும்பாலை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டார். காவல் நிலையத்தில் வைக்கப்படுவதற்கு முன்பாக அவருக்கு கரோனா தீநுண்மி பரிசோதனைசெய்யப்பட்டது.
இந்த நிலையில், கரோனா பரிசோதனை முடிவில் அவருக்கு தீநுண்மி பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. அதனால் அவரை சுகாதாரத் துறை அலுவலர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அதையடுத்து அவர் வைக்கப்பட்டிருந்த காவல் நிலையம் மூடப்பட்டு, 16 காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். காவலர்களுக்கும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு கரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிரபல நாளிதழ் ஊழியர்கள் 39 பேருக்கு கரோனா!