மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் பல்வேறு கட்சிகள், மாணவ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 100க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க: ' மோடி ஆட்சியில் 600 இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது' - அமித் ஷா