சேலம் மாவட்டம், அய்யந்திருமாளிகை பகுதியில் பொதுப்பணித் துறையின் மூலம் அன்னை சத்யா நினைவு அரசு குழந்தைகள் இல்லத்திற்கான கட்டடப் பணி 9.46 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பு இருப்பு அறை 6.69 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் என மொத்தம் 16.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொதுப்பணித் துறையின் மூலம் நடைபெற்று வருகிறது.
இந்த கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ராமன் இன்று (அக்.08) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, இக்கட்டடப் பணிகள் அனைத்தையும் தரமாகவும், துரிதமாகவும், குறிப்பிட்ட கால அளவிற்குள் விரைந்து முடித்திட வேண்டுமென பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வை.இராஜேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஏ.தியாகராஜன், உதவி செயற்பொறியாளர் ஆர்.வெங்கடாசலம், உதவி பொறியாளர்கள் ஏ.முருகேசன், செல்வி.மு.சந்திரகாந்தி உள்ளிட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: