ETV Bharat / state

அன்று குடிநீர் ஆதாரம்... இன்று முட்புதர்களின் கூடாரம் - சேலம் பனமரத்துப்பட்டி ஏரிக்கு எப்போது கிடைக்கும் விடிவுகாலம்!

சேலம்: ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சுமார் 2,400 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட கட்டமைப்புகளுடன் உருவாக்கப்பட்டு, சேலம் மாநகரின் பிரதான குடிநீர் ஆதாரமாகத் திகழ்ந்த பனமரத்துப்பட்டி ஏரி, தற்போது முட்புதர்கள் மண்டிக்கிடக்கும் அவல நிலையில் கிடப்பதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

collection-on-the-tragedy-of-panamarattupatti-lake

author img

By

Published : Sep 15, 2020, 5:49 PM IST

சேலம் மாவட்டத்தில் 1907ஆம் ஆண்டு காலகட்டத்தில் பொதுமக்களின் குடிநீர் தேவையைப் போக்க, ஆங்கிலேய அரசாங்கத்தினால், பனமரத்துப்பட்டி மலைக் குன்றுகள், அடிவாரங்களில் இருந்த 18 கிராமங்களை காலி செய்து சுமார் 2,400 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட கட்டமைகளுடன் பனமரத்துப்பட்டி ஏரி உருவாக்கப்பட்டது. மேலும் இந்த ஏரியின் நீர் ஆதாரமாக சருகு மலை, போதமலை , காப்புக்காடு ஆகிய வனப்பகுதிகள் அமையும் வகையிலும் நீரோடைகள், கால்வாய்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த ஏரியானது சேலம் மாநகருக்கு ஆங்கிலேய ஆட்சிக் காலத்திலும், அதன் பின்னரும் குடிநீர் ஆதாரமாக விளங்கி வந்துள்ளது. அதற்கென மூன்று பிரமாண்ட தொட்டிகள் அமைக்கப்பட்டு அவற்றில் கூழாங்கற்கள், ஆற்றுமணல் நிரப்பப்பட்டு ஏரியிலிருந்து கொண்டுவரப்பட்ட நீரை சுத்திகரித்து பாதுகாப்பான குடிநீராக மாற்றி சேலம் மாநகரம் மற்றும் ராசிபுரம், திருச்செங்கோடு ஆகிய பகுதி வாழ் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இயற்கை எழில் கொஞ்சும் இடமாக பனமரத்துப்பட்டி ஏரி விளங்கிய காலம் என்று ஒன்று உண்டு. அந்த காலகட்டத்தில் மக்களால் பெரிதும் விரும்பி ரசிக்கப்பட்ட நடிகர்கள் பலரும் நடித்த திரைப்படங்கள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன. முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், கருணாநிதி ஆகியோர் பனமரத்துப்பட்டி ஏரி அருகில் கட்டப்பட்ட சுற்றுலா மாளிகையில் தங்கி படப்பிடிப்பு நடத்தியதாகவும் கிராம மக்கள் நினைவு கூருகின்றனர்.

பனமரத்துப்பட்டி ஏரியின் அடிக்கரைப் பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கருக்கும் மேலான விவசாய நிலங்கள் உள்ளன. இந்த விவசாய நிலங்களில் பாக்கு, தென்னை, நெல், மஞ்சள், கரும்பு என நன்செய் பயிர்களை, 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை பயிரிட்ட நிலை மாறி, தற்போது அரளிப் பூக்கள் உள்ளிட்ட மானாவாரிப் பயிர்களை மட்டுமே விளைவிக்கப்படும் புன்செய் காடாக மாறியுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.

பனமரத்துப்பட்டி ஏரியின் தற்போதைய அவல நிலை குறித்து மனம் வெதும்பி பேட்டியளித்த கிராமவாசி செல்வராணி கூறுகையில், "கடந்த இருபது ஆண்டுக்கு முன்பு வரை விவசாயம் செழித்து இருந்தது. தற்போது புன்செய் காடாக மாறிப்போன பனமரத்துப்பட்டி ஏரியின் அடிக்கரை நிலம் கழிவு நீரைக்கொண்டு அரளிப் பூக்கள் உள்ளிட்ட மானாவாரிப் பயிர்களை செய்யும் இடமாக மாறியிருக்கிறது. ஆயிரக்கணக்கான ஏக்கர் ஏரியில் நிலத்தடி நீரை உறிஞ்சி, விஷமாக மாற்றும் முள் மரங்கள் நிறைந்த பகுதியாக மாறி இருப்பது, எங்களுக்கு கடுமையான மன உளைச்சலையும் வேதனையையும் தருகிறது.

பனமரத்துப்பட்டி ஏரி மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதியில் படப்பிடிப்பு நடத்திய இயக்குநர்கள், நடிகர்கள் அனைவரும் தற்போது ஏரி உள்ள நிலையைப் பார்த்து எங்களுக்கு உதவ முன்வர வேண்டும். மீண்டும் இங்கே விவசாயம் செழித்து விவசாயிகள் நல்ல வாழ்க்கையை பெற, ஏரியைத் தூர்வார அரசு மற்றும் திரைப்பிரபலங்கள் முன்வர வேண்டுமென கோரிக்கை விடுக்கிறோம்" என்று தெரிவித்தார்.

பனமரத்துப்பட்டியின் ஏரியின் அவல நிலை குறித்து விரிவாகப் பேட்டியளித்த ஏரி இயற்கை பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பொன். சரவணன் கூறுகையில்,"ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு முழுவதும் குடிமராமத்துப் பணிகள், ஏரி உள்ளிட்ட நீர் நிலைகளில் அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், முதலமைச்சரின் சொந்த மாவட்டமான சேலத்தில் குடிமராமத்துப் பணிகள் நடைபெறவில்லை. அதிலும் குறிப்பாக இந்த பனமரத்துப்பட்டி ஏரி தொடர்ந்து அதிமுக அரசால் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. குடிமராமத்து நாயகன், விவசாயிகளின் பாதுகாவலன் என்று முதலமைச்சரை அழைக்கும் அதிமுக நிர்வாகிகளே பனமரத்துப்பட்டி ஏரி தூர் வாரப் படுவதற்கும் முட்புதர்களை அகற்றுவதற்கும் தடையாக இருக்கிறார்கள்.

இது தொடர்பாக நாங்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் சேலம் மாநகராட்சி நிர்வாகத்திடமும் பலமுறை புகார் மனு அளித்திருக்கிறோம். முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்து இருக்கும் ஏரியில் அவற்றை அகற்றித் தூர்வாரினால் மட்டுமே தண்ணீர் தேங்கும். மழை எவ்வளவு பெய்தாலும் தூர்வாரப்படாமல் இருப்பதினால் ஏரியில் தண்ணீர் தேங்குவதில்லை. குடிப்பதற்கு கூட நாங்கள் காசு கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். இந்தப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் 1500 அடிக்கும் கீழே சென்றுவிட்டது. ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தாலும், தண்ணீர் கிடைப்பதில்லை. சொந்த மாவட்டத்தின் மீது முதலமைச்சர் அக்கறை கொள்ள நாங்கள் வலியுறுத்துகிறோம்" என்று தெரிவித்தார்.

அதேபோல ஏரி இயற்கை பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் கூறுகையில்,"பனமரத்துப்பட்டி ஏரி, மழை நீர் வரும் வழிகள் தற்போது தனியார் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. ஜருகு மலை, போதமலை ஆகிய மலைகளின் அடிவாரங்களில் தற்போது தனியார் நில உரிமையாளர்கள் தடுப்பணைகளை அமைத்து, ஏரியின் நீர் ஆதாரத்தையும் கபளீகரம் செய்துள்ளனர். அந்த தடுப்பு அணைகளையும் அகற்றிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அன்று குடிநீர் ஆதாரம்... இன்று முட்புதர் கூடாரம்!

ஏரி முழுக்க பயன்பாடற்ற நிலையில் இருப்பதால் பகல் மற்றும் இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் நபர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்த ஏரியை தூர் வாரி அழகுபடுத்தினால் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இயற்கை எழில் கொஞ்சும் ஏரியாக பனமரத்துப்பட்டி ஏரி மாறும். அதனை சுற்றுலா தலமாகவும் அறிவித்தால், அதன் மூலம் அரசுக்கு வருமானம் கிடைக்கவும் வழி ஏற்படும்" என்று தெரிவித்தார்.

மேலும் பனமரத்துப்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் சார்பில் சில நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், 'தலைவாசல் கால்நடை ஆராய்ச்சி பூங்காவிற்கு பனமரத்துப்பட்டி வழியாக குழாய் மூலம் கொண்டு செல்ல உள்ள காவிரி நீரை பனமரத்துப்பட்டி ஏரியில் நிரப்பிவிட வேண்டும். பனமரத்துப்பட்டி ஏரி முழுவதும் சீமை கருவேல மரங்கள் அடர்ந்துள்ளதை அகற்றி, குடிமராமத்துப் பணி செய்து ஆழப்படுத்த வேண்டும்.

சிதிலமடைந்த நிலையில் உள்ள ஏரியின் கரையை அகற்றி சிமெண்ட் கலவை மூலம் வலுவான கரையை அமைத்திட வேண்டும். நீர் வழி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்' எனப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.

பனமரத்துப்பட்டி ஏரியின் தற்போதைய நிலையினால் விவசாயம் செய்ய இயலாமல் தவித்து வரும் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றிட அரசு முன்வரவேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாகவும் இருந்து வருகிறது.

இதையும் படிங்க: வாகன விற்பனையில் புரட்சியை ஏற்படுத்த உள்ள இ-பைக்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.