சேலம்: செவ்வாய்பேட்டை பாண்டு ரங்கநாதர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சங்கர். இவர் அதே பகுதியில் உள்ள பிரபல ஹோட்டலுக்குச் சென்று இட்லி வாங்கியுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்த சங்கர், இட்லியை சாப்பிட தொடங்கி உள்ளார். அப்போது இட்லிக்கு வழங்கபட்டிருந்த சட்னியில் கரப்பான் பூச்சி ஒன்று கிடந்துள்ளது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சங்கர், இட்லி மற்றும் சட்னியை ஹோட்டலுக்கு எடுத்து வந்து கடை ஊழியர்களிடம் புகார் தெரிவித்துள்ளார். அதற்கு கடை ஊழியர்கள் உரிய விளக்கம் தரவில்லை என தெரிகிறது. எனவே இதுகுறித்து சேலம் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்கு சங்கர் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து உணவகத்தில் சோதனை மேற்கொண்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள், ஹோட்டலில் இருந்து உணவு மாதிரி எடுக்கப்பட்டு சோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் கரப்பான் பூச்சி சட்னியில் கிடந்தது குறித்து விளக்கம் அளிக்குமாறு, ஹோட்டல் உரிமையாளருக்கு சேலம் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: தீபாவளி தின்பண்டத்தில் உயிருடன் நெளியும் புழுக்கள் - மக்கள் பதற்றம்