தமிழ்நாடு கிராம வங்கியின் சார்பில் மாநில அளவிலான வங்கிக் கடன் வழங்கும் விழா சேலத்தில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 31 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ. 112 கோடி மதிப்பீட்டில் பயிர்க் கடன், சுய உதவிக் குழுக்களுக்கு கடன், தொழில் கடன் ஆகியவற்றை வழங்கினார்.
சேலத்தில் சட்டக் கல்லூரி: முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு - சேலம்
சேலம்: சட்டக் கல்லூரி இந்த ஆண்டு முதல் சேலத்தில் தொடங்கப்பட்டு செயல்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
cm
தமிழ்நாடு கிராம வங்கியின் சார்பில் மாநில அளவிலான வங்கிக் கடன் வழங்கும் விழா சேலத்தில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 31 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ. 112 கோடி மதிப்பீட்டில் பயிர்க் கடன், சுய உதவிக் குழுக்களுக்கு கடன், தொழில் கடன் ஆகியவற்றை வழங்கினார்.
Intro:சேலத்தில் இந்த ஆண்டு முதல் சட்ட கல்லூரி தொடங்கப்பட்டு செயல்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் தெரிவித்துள்ளார்.
Body:தமிழ்நாடு கிராம வங்கியின் சார்பில் மாநில அளவிலான வங்கி கடன் வழங்கும் விழா சேலத்தில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு 31,000 பயனாளிகளுக்கு ரூ 112 கோடி மதிப்பிலான பயிர் கடன் , சுய உதவி குழுக்களுக்கு கடன் மற்றும் தொழில் கடன் ஆகியவற்றை வழங்கினார்.
விழாவில் பேசிய அவர்," உலகமயமாக்கலுக்குப் பிறகு இந்தியாவில் வங்கிகள் இணைப்பு நடைபெற்று வருகிறது.
மத்திய அரசின் முயற்சியால் இந்தியா முழுவதும் 196 ஊரக வங்கிகள் 145 பொதுத்துறை வங்கிகள் ஆக இணைக்கப் பட்டுள்ளது. தமிழ்நாடு கிராம வங்கியில் பொருத்தவரை 23 ஆயிரம் கோடி ரூபாயை ஒரு ஆண்டுக்குள் வர்த்தகம் செய்து லாபத்தில் இயங்குவதாக குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர் தமிழ்நாடு கிராம வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு மையம் அமைக்க சேலம் அடுத்த ஜாகிர் அம்மாபாளையம் கிராமத்தில் இரண்டு ஏக்கர் நிலத்தை தமிழக அரசு வழங்கும் .
இதை 110 விதியின் கீழ் சட்டமன்றத்திலேயே அறிவித்தேன். மேட்டூர் அணை உபரி நீரை கொண்டு நூறு ஏரிகளை நிரப்பும் திட்டம் அடுத்த இரு ஆண்டுகளுக்குள் சேலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும்.
இது விவசாயிகளின் பாசன தேவையை கண்டிப்பாக பூர்த்தி செய்யும் .அதேபோல ஓசூரில் மலர் சாகுபடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் சர்வதேச மலர் ஏல மையம் தொடங்கப்படும்.
சேலம் மாவட்டத்தில் புதிய சட்ட கல்லூரி தொடங்கப்படும் அது இந்த கல்வி ஆண்டு முதல் இயங்கும் "என்று தெரிவித்தார்
Conclusion:இந்த நிகழ்ச்சியில் மூவாயிரத்திற்கு மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குனர் பத்மஜா சந்துரு , நபார்டு வங்கியின் தலைமை பொதுமேலாளர் பத்ம ரகுநாதன், சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், தமிழ்நாடு கிராம வங்கியின் தலைவர் தனராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.