ETV Bharat / state

சாதிக் கலவரம் ஏற்படக் விடக்கூடாது - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை - சேலத்தில் ஆய்வுக்கூட்டம்

சேலத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனான ஆய்வுக்கூட்டத்தில், எந்த மாவட்டத்திலும் எந்த சூழ்நிலையிலும் சாதிக் கலவரம் ஏற்பட்டு விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

ஸ்டாலின் உத்தரவு
ஸ்டாலின் உத்தரவு
author img

By

Published : Feb 16, 2023, 6:51 AM IST

சேலம்: "கள ஆய்வில் முதலமைச்சர்" திட்டத்தின் கீழ் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களின் காவல்துறை உயர் அலுவலர்களுடன் சட்டம் ஒழுங்கு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பட்டா மாறுதல், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மற்றும் சேலம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டு வரும் ஈரடுக்கு பேருந்து நிலையத்திற்கான கட்டுமானப் பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச் சார்ந்த தொழில் துறை மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள், மகளிர் சுயஉதவிக் குழுவினர் மற்றும் "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் பயன் பெற்றுவரும் கல்லூரி மாணவ, மாணவியர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துரையாடினார்.

பின்னர், நேற்று மாலை சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், "கள ஆய்வில் முதலமைச்சர்" திட்டத்தின் கீழ், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களின் காவல்துறை உயர் அலுவலர்களுடன் சட்டம் ஒழுங்கு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக் கூட்டத்தில், முதலமைச்சர் மாவட்டங்களில் பல்வேறு சமூக குற்றங்களை தடுப்பதற்காக எடுக்கப்பட்டு வரும் சிறப்பான நடவடிக்கைகளுக்கு காவல் துறை கண்காணிப்பாளர்களுக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும் தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

அதேசமயம், காவல்துறையின் பணிகள் மக்கள் எளிதில் அணுகும் விதமாக இருக்கவேண்டும் என்றும், காவல் நிலையத்திற்கு மக்கள் எவ்வித அச்சமுமின்றி புகார் அளிக்க வரக்கூடிய சூழ்நிலையை, அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார். மேலும் மக்களுக்கும், காவல்துறைக்குமான உறவு என்பது எளிமையானதாகவும், மனிதநேய அடிப்படையிலும் அமைய வேண்டும். இதில், காவல்துறை உயர் அலுவலர்கள் காட்டும் அணுகுமுறை தான் அவர்களுக்குக் கீழ் பணிபுரியும் காவல் ஆய்வாளரும் மேற்கொள்வார் என்பதை எப்போதும் மனதில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

காவல்துறையின் செயல்பாடுகள் மக்களுக்குத் தெரியும் படி வெளிப்படையாக இருக்க வேண்டும். எந்தவொரு சம்பவத்தை பற்றியும் நடந்த பிறகு ஆராய்வதைவிட அது நடப்பதற்கான சாத்தியக்கூறுகளை முன்பே அறியப்பெற்று அதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது சிறப்பாக இருக்கும். இதற்கு காவல்துறையின் க்யூ பிராஞ்ச், நுண்ணறிவுப் பிரிவு ஆகியவை தரும் செய்திகளை கவனமாக ஆய்ந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

சட்டவிரோத செயல்களை, குற்றச் சம்பவங்களைத் தடுப்பது தான் திறமையான காவல் துறைக்கு இலக்கணம் ஆகும். சமயம், மதம் அல்லது பண்பாடு சார்ந்த நிகழ்வுகளில், உதாரணத்திற்கு கோவில் திருவிழாக்கள், எருது விடும் நிகழ்வுகள் போன்றவற்றில் கவனக் குறைவாக இருந்து விட்டால் அது மாவட்ட நிர்வாகத்திற்கும், அரசுக்கும் உள்ள நற்பெயரை பாதித்துவிடும் என்று சுட்டிக்காட்டினார். மேலும், காவல்துறை கவனம் செலுத்தவேண்டிய மற்றுமொரு முக்கிய இனம் போதைப் பொருள் ஒழிப்பு ஆகும் என்று குறிப்பிட்டு, சில மாவட்டங்களில் சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தாலும், சரகம் முழுவதும் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட வேண்டும். மாநில எல்லைப்பகுதியாக இருப்பதால் உங்கள் கவனம் இன்னும் அதிகமாக இருக்க வேண்டும்.

காவல் கண்காணிப்பாளர்கள், காவல் நிலையங்களை அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு அங்கு வரும் பொதுமக்களை சந்திப்பது, மக்களிடையே நல்ல பெயரை பெற்றுத் தருவதோடு, காவலர்களிடையே ஒரு எச்சரிக்கையான நிலையையும் உண்டாக்கும். எந்த மாவட்டங்களிலும் எந்த சூழ்நிலையிலும் சாதிக் கலவரம் ஏற்படாமல் கட்டாயம் பார்த்துக் கொள்ள வேண்டும். இதில், மாவட்ட ஆட்சியர்களின் பங்கு மிக முக்கியமானது என்று தெரிவித்த முதலமைச்சர், வாராந்திர சட்டம் ஒழுங்கு கூட்டத்தில் இதனை வருவாய் மற்றும் காவல் துறையினருடன் ஒருங்கிணைந்து ஆய்வு நடத்தி, தேவையான இடங்களில் அமைதிப் பேச்சு வார்த்தைகளை நடத்தி பிரச்னைகளை ஆரம்ப கட்டத்திலேயே தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

வருவாய்த்துறை, காவல்துறை ஆகிய துறைகள் நீதித்துறையுடனும் ஒருங்கிணைந்து வழக்குகளை விரைந்து முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டுக் கணக்கில் வழக்குகளை நடத்துவது குற்றவாளிகளுக்குத்தான் சாதகமாக முடியும். எனவே, காவல் கண்காணிப்பாளர்கள் பழைய வழக்குகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். இதனை, காவல்துறை தலைவர்கள், துணைத் தலைவர்கள் ஆகிய உயர்நிலை அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.

நம்முடைய பணி, மக்களுக்கானது என்பதை உணர வேண்டும். இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் போதைப் பொருளை பெருமளவு ஒழிக்கும் காவல் கண்காணிப்பாளரை எப்போதும் பெரிதும் பாராட்டுவேன். பெரும்பாலும், குற்ற நிகழ்வுகளில் பாதிக்கப்படுபவர்கள், நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களாக இருப்பதால், அவர்களிடம் நீங்கள் கடுமையாக நடந்து கொள்ளாமல் அவர்களின் புகார்களில் உள்ள உண்மைத் தன்மையை ஆய்ந்தறிந்து அவர்களுக்கு நீதி கிடைக்க உறுதுணையாக இருக்க வேண்டும். அப்போது தான், "காவல் துறை உங்கள் நண்பன்" - என்ற சொற்றொடர் உண்மையாகும் என்று அறிவுறுத்தினார்.

பல்வேறு அரசுப் பணிகள் இருந்தாலும், காவல்துறைக்கென்று ஒரு தனி சிறப்பு உண்டு. அதற்கான பெருமையையும், மாண்பையும் நீங்கள் இன்னும் உயர்த்திக் காட்டும் வகையில் பணியாற்ற வேண்டும். மேலும் இந்த ஆய்வுக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் இறையன்பு, காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் சைலேந்திர பாபு, காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) சங்கர், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி. சிங், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: குடியரசுத் தலைவர் மதுரை வருகை - பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.