ETV Bharat / state

சேலம் தீ விபத்து - முதலமைச்சர் இரங்கல்

சேலம் : மின்கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த ஐந்து பேரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்து செய்தி வெயிட்டுள்ளார்.

cm condolences for Salem Fire accident
cm condolences for Salem Fire accident
author img

By

Published : Sep 4, 2020, 6:16 PM IST

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் மின் கசிவால் உயிரிழந்த சம்பவல் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”சேலம் மேற்கு வட்டம், நரசோதிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திரு.அன்பழகன் என்பவரது வீட்டில் செப்.3ஆம் தேதி நள்ளிரவு எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மின்கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அன்பழகன் என்பவரது மனைவி புஷ்பா, கார்த்திக், கார்த்திக் அவரது மனைவி மகேஸ்வரி, மகன்கள் சர்வேஷ், முகேஷ் ஆகிய ஐந்து நபர்கள் பலத்த தீக்காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ஐந்து நபர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி குறித்து அறிந்தவுடன் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும் சேலம் மாவட்ட நிர்வாகத்திற்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.