ETV Bharat / state

சின்ன திருப்பதியில் தேர்த்திருவிழா கொண்டாட்டங்கள் கோலாகலம்! - temple festivel

சேலம்: புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையான நேற்று சின்ன திருப்பதியில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோயில் தேர்த்திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

Chinna Thirupathi venkatesha perumal temple festivel
author img

By

Published : Oct 13, 2019, 12:58 PM IST

சேலம் அஸ்தம்பட்டி அருகே உள்ள சின்ன திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோயிலில் புரட்டாசி மாதத்தையொட்டி இந்த கோயிலில் கடந்த ஒரு மாத காலமாக சிறப்பு பூஜைகளும் புரட்டாசி சனிக்கிழமையன்று வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையான நேற்று மாலை 6 மணி அளவில் தேர்த்திருவிழா நடந்தது. இவ்விழாவில் அஸ்தம்பட்டி, சின்ன திருப்பதி, கன்னங்குறிச்சி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் மற்றும் முதியவர்கள் என பலரும் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

சின்ன திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோயில் தேர்த்திருவிழா

தேர் கோயிலின் அருகே வந்தபோது அந்தப் பகுதியில் குவித்து வைக்கப்பட்டிருந்த கற்களின் மீது சில முதியவர்களும், பெண்களும் சரிந்து விழுந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பிறகு தேர் கோயிலைச் சுற்றி இழுத்து வரப்பட்டு நிலை நிறுத்தப்பட்டது. விழாவின் நிறைவாக வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: 3டி ஆர்ட்டிஸ்ட் ஒடியத்தின் கண்கவரும் ஓவியங்களின் தொகுப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.