சேலம் இரும்பாலை சாலையில் உள்ள புது ரோடு பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று இயங்கிவருகிறது.
இந்தக் கடை மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் இருப்பதால் மதுப்பிரியர்களின் கூட்டம் அதிகரித்து பொதுமக்கள் சாலையில் நடமாட முடியாத அளவுக்கு நெருக்கடி ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் எழுப்பிவந்தனர்.
இந்நிலையில் மக்கள் அரசு கட்சி சார்பில், பிரச்னைக்குரிய டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி புதுரோடு பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
மேலும் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தொடர் முழக்க ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
போராட்டத்தை அடுத்து அந்த இடத்திற்கு வந்த சூரமங்கலம் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அரசு கட்சியின் தலைவர் ரஜினிகாந்த், மாவட்ட தலைவர் சுப்பிரமணியம் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோரைக் கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர்.
ஆனால் திடீரென போராட்டக்காரர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உருவபொம்மையை எரித்து போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதனால் அவர்களை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
போராட்டகாரர்கள் கூறுகையில், பெண்கள், குழந்தைகள் என யாரும் சாலையில் நடக்கமுடியாத அளவுக்கு மதுப்பிரியர்களின் அட்டகாசம் புதுரோடு பகுதியில் அதிகரித்துள்ளதால் இந்தப் போராட்டத்தை நடத்தி இருக்கிறோம்.
ஆனால் கடையை மூடக் கூடாது என்று மதுப்பிரியர்கள் கூறி கடையின் முன்பு நின்றுகொண்டு மது வாங்கிச் செல்வது அதிர்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்தனர்.
மதுப்பிரியர்கள் அட்டகாசம்: முதலமைச்சரின் உருவபொம்மை எரித்து போராட்டம் - முதலமைச்சரின் உருவபொம்மை எரிப்பு
சேலம்: டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி முதலமைச்சரின் உருவபொம்மை எரித்து போராடிய 40-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டனர்.