விநாயகர் சதுர்த்தி பொதுவாக 11 நாள்களாக நாட்டின் பல பகுதிகளில் கொண்டாடப்பட்டுவருகிறது. விநாயகர் சதுர்த்தி அன்று பக்தர்கள் பெரிய அளவிலான விநாயகர் சிலையை வைத்து, அதற்குப் பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு கரோனாவால் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் ஆர்ப்பரிப்பின்றி கொண்டாப்படுகிறது. கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் வீடுகளிலேயே விநாயகர் சிலை வைத்து வழிபட வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்தது. பல்வேறு அரசு நிகழ்வுகளில் கலந்துகொள்ள சேலம் வருகைதந்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்தில் சிறிய அளவிலான விநாயகர் சிலையை வழிப்பட்டார்.
இந்த வழிபாட்டில், பால், இளநீர், கொழுக்கட்டை உள்ளிட்டவற்றை விநாயகருக்குப் படையலாக வைத்து, விநாயகரை தனது குடும்பத்துடன் வழிபட்டார். அதனைத் தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
இதையும் படிங்க:வேழ முகத்தோனின் வியத்தகு ஆலயம்; அதிசயங்கள் நிறைந்த ஆன்மிக குகை!