ETV Bharat / state

மேட்டூர் உபரி நீர் பாதையில் செத்து மிதக்கும் மீன்கள்!. - சிட்கோ

மேட்டூர் உபரி நீர் பாதையில் மீன்கள் செத்து மிதப்பதற்கு ரசாயன கழிவுகள் காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Chemical wastage  mettur water  Chemical wastage mixed with mettur water  fishes died  fishes  Chemical  salem  salem news  salem latest news  மேட்டூர்  உபரி நீர்  மேட்டூர் உபரி நீர் பாதை  செத்து மிதக்கும் மீன்கள்  மீன்கள்  ரசாயன கழிவு  சிட்கோ  அனல் மின் நிலையம்
செத்து மிதக்கும் மீன்கள்
author img

By

Published : Nov 16, 2022, 12:17 PM IST

சேலம்: மேட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் சிட்கோ உள்ளிட்ட ரசாயன தொழிற்சாலைகளும், அனல் மின் நிலையமும் செயல்பட்டு வருகிறது. ரசாயன தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலைகள் மூலம் சுத்தம் செய்த பிறகு தண்ணீரை வெளியேற்ற வேண்டும்.

ஆனால் அதற்கு அதிக செலவு ஏற்படுவதால் தொழிற்சாலை உரிமையாளர்கள் ரசாயன கழிவுநீரை சுத்தம் செய்யாமல் அப்படியே வெளியேற்றி வருகின்றனர். குறிப்பாக கழிவுநீர் நேரடியாக 16 கண் உபரி நீர் போக்கி கால்வாய் வழியாக வெளியேற்றப்படுவதால் ரசாயன கழிவுநீர் கால்வாயில் கலந்து ஏராளமான மீன்கள் செத்து மிதப்பது தொடர்கதையாக உள்ளது.

ஆயிரக்கணக்கில் மீன்கள் தற்பொழுது செத்து மிதப்பதால் கடுமையான துர்நாற்றம் வீசி நோய் தொற்று ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. மேலும் செத்து மிதக்கும் மீன்களை ஏராளமானோர் விற்பனைக்கு எடுத்து செல்வதால் அதனை உண்ணும் பலர் பாதிப்புக்கு உள்ளாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதுகுறித்து அரசு மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ரசாயன கழிவுகளை நேரடியாக திறந்து விடும் ஆலைகள் மீது ஊரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் செத்து மிதக்கும் மீன்களை அகற்ற வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: கல்லூரி மாணவர் ரயில் மோதி உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.