சேலம் மாவட்டம்,மேட்டூர் அணையைக் கண்காணிக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மூலம் அமைக்கப்பட்ட காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் வழிகாட்டுதலின்படி துணைக் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. இந்தக் குழுவானது காவிரி ஆறு பாயும் மாநிலங்களில் உள்ள நீர் தேக்கங்களில், நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றத்தை குறித்து முழு விவரங்களை சேகரித்து வருகிறது.
அந்த வகையில், கடந்த 4, 5ஆம் தேதிகளில் இத்துணைக் குழுவினர் கர்நாடக மாநிலத்தில் கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றப்படும் இடங்கள் குறித்து ஆய்வு செய்தனர். இந்நிலையில், இன்று தமிழக எல்லையில் உள்ள மத்திய நீர் ஆணைய கட்டுப்பாட்டில் இருக்கும் பிலி குண்டுலுவையும், தொப்பையாறு பகுதியையும் ஆய்வு செய்த குழு, பிற்பகலில் மேட்டூர் அணைக்கு வந்து நீர்வரத்து மற்றும் நீர் வெளியேறும் பகுதிகளை ஆய்வு செய்தனர்.
மேட்டூர் அணையில் மத்திய நீர்வள ஆணைய கண்காணிப்பு குழு ஆய்வு பின்னர் இது குறித்து மத்திய நீர்வள ஆணைய கண்காணிப்பு பொறியாளர் மோகன் முரளி செய்தியாளர்களிடம் கூறுகையில்,"காவிரி ஆற்றுப்படுகையில் எந்தெந்த பகுதிகளில் தானியங்கி நீர் அளவீட்டுமானி பொருத்துவது என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரளாவிலும் ஆய்வு மேற்கொண்ட பின்னர் ஜூலை 31ஆம் தேதி ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். இதன் அடிப்படையில் இன்று மேட்டூர் அணையை எங்கள் குழு பார்வையிட்டது. நாளை பவானிசாகர் அணை, அமராவதி அணை, மற்றும் பாண்டிச்சேரிக்கு மாநிலத்தில் காவிரி ஆறு செல்லும் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும்" என்றார்.
மேட்டூர் அணைப் பகுதியில் மத்தியக் குழு நேரில் ஆய்வு!
சேலம் (10.06.2019): காவிரி நதிநீர் ஒழுங்காற்று துணை குழுவின், மத்திய நீர்வள ஆணைய கண்காணிப்பு பொறியாளர் மோகன் முரளி தலைமையில் வந்த அதிகாரிகள் மேட்டூர் அணையில் இன்று நேரில் ஆய்வு நடத்தினர்.
சேலம் மாவட்டம்,மேட்டூர் அணையைக் கண்காணிக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மூலம் அமைக்கப்பட்ட காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் வழிகாட்டுதலின்படி துணைக் குழு ஒன்று உருவாக்கப்பட்டது.
இந்தக் குழுவானது காவிரி ஆறு பாயும் மாநிலங்களில் உள்ள நீர் தேக்கங்களில் , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றத்தைக் கணக்கிட, மத்திய நீர் ஆணையம் மூலம் அமைக்கப்படவுள்ள ஆன்லைன் கண்காணிப்பு அமைப்பு குறித்து முழு விவரங்களை சேகரித்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு, கர்நாடகம், பாண்டிச்சேரி மற்றும் கேரள மாநிலங்களில் துணைக்குழுவினர் ஆய்வு நடத்தி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை மேற்கொண்டது.
அந்த வகையில், இந்த மாதம் 4 மற்றும் 5ம் தேதிகளில் இத்துணைக் குழுவினர் கர்நாடக மாநிலத்தில் கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றப்படும் இடங்கள் குறித்து ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில், இன்று தமிழக எல்லையில் உள்ள மத்திய நீர் ஆணைய கட்டுப்பாட்டில் இருக்கும் பிலி குண்டுலுவையும், தொப்பையாறு பகுதியையும் ஆய்வு செய்த குழு ,
பிற்பகலில் மேட்டூர் அணையை ஆய்வு செய்தனர்.தொடர்ந்து மேட்டூர் அணையின் நீர்வரத்து மற்றும் நீர் வெளியேறும் பகுதிகளையும் ஆய்வு செய்தனர்.
பின்னர் இது குறித்து மத்திய நீர்வள ஆணைய கண்காணிப்பு பொறியாளர் மோகன் முரளி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், " காவிரி ஆற்றுப்படுகையில் எந்தெந்த பகுதிகளில் தானியங்கி நீர் அளவீட்டு மானி பொறுத்துவது என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.
தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரளாவிலும் ஆய்வு மேற்கொண்ட பின்னர் ஜூலை 31ம் தேதி ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
இதன் அடிப்படையில் இன்று மேட்டூர் அணையை , மத்திய குழு பார்வையிட்டது.
பின்பு நாளை பவானிசாகர் அணை,அமராவதி அணை, மற்றும் பாண்டிச்சேரிக்கு இடைப்பட்ட காவிரி ஆறு செல்லும் பகுதிகளில் மூன்று நாள்களுக்கு ஆய்வு மேற்கொள்ளப்படும்." என்று தெரிவித்தார்.
இந்த ஆய்வில் மேல் காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் ஜெயகோபால், கிருஷ்ணராஜ சாகர் கண்காணிப்பு பொறியாளர் ராமேந்திரா, புதுவை பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளர் சுரேஷ், ஆழியாறு துணை இயக்குனர் ராஜ்குமார், இந்திய வானிலை ஆய்வு மைய அறிவியலாளர் அமுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.