ETV Bharat / state

8 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் உயிரிழந்தவரின் உடல் தோண்டி எடுப்பு

author img

By

Published : Jul 3, 2020, 11:52 AM IST

சேலம்: 8 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் உயிரிழந்தவரின் உடலை மறுஉடற்கூறாய்விற்காக சிபிசிஐடி காவலர்கள் தோண்டி எடுத்தனர்.

murder-case-8-years-ago-in-salem
murder-case-8-years-ago-in-salem

சேலம் மாவட்டம் சித்தனூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் 2012ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி வழித்தட தகராறு காரணமாக அடித்து கொலை செய்யப்பட்டார். அதையடுத்து அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் விஜயராஜா, ராம்குமார் ஏழுமலை ஆகியோருடன் சேர்ந்து மணிகண்டனை கொலை செய்ததாக கிராம நிர்வாக அலுவரிடம் சரணடந்தார்.

அதனால் காவல்துறையினர் நான்கு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து அந்த வழக்கு சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது அப்போதைய இரும்பாலை காவல் ஆய்வாளர் சண்முகம் தரப்பில் மணிகண்டன் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.

பின்னர் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மணிகண்டனின் பெற்றோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு உடற்கூறாய்வு செய்து, சிபிசிஐடி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என 2013ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர்.

அதன்படி கடந்த நவம்பர் மாதம் சிபிசிஐடி தலைமையில் விசாரணை நடத்த உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார். மேலும் 2012 முதல் 2019 வரை வழக்கில் விசாரணை அலுவலராகயிருந்த காவல் ஆய்வாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

அதனடிப்படையில் சேலம் மாநகர காவல் ஆணையாளர், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். எனவே மணிகண்டனின் உடல் 8 ஆண்டுகளுக்குப் பிறகு மறு உடற்கூறாய்விற்கு நேற்று ஜூலை 2ஆம் தேதி தோண்டி எடுக்கப்பட்டது. அதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது.

இதையும் படிங்க: புதுச்சேரியில் கோஷ்டி மோதல் - 2 பேர் அடித்துக் கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.