ETV Bharat / state

'காவிரி டெல்டா பகுதி, இனி  பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்' - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

சேலம்: காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Chief Minister Edappadi Palanisamy, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
Chief Minister Edappadi Palanisamy, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
author img

By

Published : Feb 9, 2020, 4:27 PM IST

Updated : Feb 9, 2020, 5:57 PM IST

சேலம் மாவட்டம் தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடைப் பூங்காவுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயப் பெருவிழா மற்றும் கண்காட்சியை தொடங்கி வைத்தபோதே இதனைத் தெரிவித்தார்.

இந்த விழாவில் பங்கேற்ற முதலமைச்சர், 'காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும். இதுதொடர்பாக சிறப்புச் சட்டம் கொண்டு வரப்படும். விவசாயிகள் படும் துயரத்தை கவனத்தில் கொண்டு இதை நான் அறிவிக்கிறேன். காவிரி டெல்டாவில் மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கு அனுமதிக்க முடியாது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் தமிழ்நாடு அரசு கொண்டு வராது.

காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான அனுமதியை அஇஅதிமுக தரவில்லை. இன்று நாடகமாடும் திமுக தான் அதற்கான ஒப்பந்தத்தைப் போட்டது. இந்த ஒப்பந்தம் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. அஇஅதிமுக தலைமையிலான தமிழ்நாடு அரசைப் பற்றியும், அமைச்சர்களைப் பற்றியும் திமுகவினர் பொய் பரப்புரைகளை செய்து வருகின்றனர். அவர்கள் என்னதான் பரப்புரை செய்தாலும் அஇஅதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது' எனத் தெரிவித்துக்கொண்டார்.

15 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கிய, இந்த விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் ஜெயக்குமார், உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

இதற்கிடையே, தமிழ்நாடு முதலமைச்சரின் இந்த அறிவிப்பு தமிழ்நாட்டின் பல்வேறு தரப்பினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் சுந்தர்ராஜன், 'போராடும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்திய மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின், நீண்ட நாள் கோரிக்கையான இந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு முதலமைச்சருக்கு வாழ்த்துகளையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த அறிவிப்பை செயல்படுத்தும் முதல் செயலாக, மீத்தேன் மற்றும் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெற கோருகிறோம்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க : பள்ளி மாணவர்களுக்கு காவல் துறை சார்பில் தற்காப்பு பயிற்சி - திருச்சி டிஐஜி தகவல்!

Intro:சர்வதேச தரத்திலான புதிய கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தை வாழப்பாடியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை திறந்து வைத்தார்.

Body:சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த காட்டுவேப்பிலைப்பட்டி கிராமத்தில், சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் சார்பில் சர்வதேச தரத்திலான புதிய கிரிக்கெட் விளையாட்டு மைதானம் 16 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மைதானத்தை இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் பிசிசிஐ முன்னாள் சேர்மன் சீனிவாசன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ரூபா குருநாத் , தேசிய கிரிக்கெட் அகாடமி இயக்குனர் ராகுல் டிராவிட், தமிழ் நாடு கூட்டுறவு வங்கி சேர்மன் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் பேசிய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் , சேலம் போன்ற நாட்டின் உட்பகுதியில் இருந்து சர்வதேச அளவில் விளையாடும் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் வரும் காலத்தில் உருவாகுவார்கள். அதற்கு இந்த கிரிக்கெட் மைதானம் உதவும்.

வெகு விரைவில் இங்கே நான் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளேன். இந்த புதிய கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில், டிஎன்பிஎல் போட்டிகள் நடக்க வேண்டும். " என்று கூறினார்.

அடுத்து பேசிய பிசிசிஐ முன்னாள் சேர்மன் சீனிவாசன் கூறுகையில்," அழகான இயற்கையான சூழலில் அமைந்துள்ள இந்த கிரிக்கெட் மைதானம் , முதலமைச்சர் கையால் திறந்து வைக்கப்பட்டது தமிழக அளவில் இதுதான் முதல் முறை.

இதற்கு முன் எந்த முதலமைச்சரும் கிரிக்கெட் மீது இவ்வளவு ஆர்வம் காட்டியது இல்லை. அதற்காக முதலமைச்சரை மனம் திறந்து பாராட்டுகிறேன்.

தேவையான அடிப்படை வசதிகளை உடனே செய்து கொடுத்தால் அடுத்த ஆண்டு முதல் இங்கே டிஎன்பிஎல் விளையாட்டு போட்டிகள் நடைபெறும். " என்று தெரிவித்தார்.

தொடர்ந்து விழாவில் பேசிய, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , " தமிழகம் விளையாட்டில் சிறந்து விளங்க அரசு அம்மா விளையாட்டு மையங்கள் அமைத்து வருகிறது. பல்வேறு திட்டங்களை விளையாட்டு
வீரர்கள் மேம்பாடிற்காக நிறைவேற்றப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டத்தில் இதுபோன்ற விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கு ஐபிஎல் போட்டிகள் நடத்த வேண்டும் என்று சீனிவாசன் அவர்களை கேட்டு கொள்கிறேன்.

அதைப் போல சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் பிரச்சினைகளையும் அவர் தீர்வு காண வேண்டும். " என்றார்.

Conclusion:தொடக்க விழாவின் இறுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ராகுல் டிராவிட்டுடன் சிறிது நேரம் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார்.
Last Updated : Feb 9, 2020, 5:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.