சேலம் - சென்னை இடையே எட்டு வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் அண்மையில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில் இதனைக் கண்டித்து சேலம் மாவட்டம் பூலாவரி, குப்பனூர், நாழிக்கல்பட்டி உள்ளிட்ட கிராமத்து விவசாயிகள் கடந்த நான்கு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதில் விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு, எட்டு வழி சாலை திட்டத்திற்கு எதிரான தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இதனையடுத்து நாழிக்கல்பட்டி பிரிவு காட்டில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்திய விவசாயிகள் 21 பேர் மீது ஊரடங்கு உத்தரவை மீறியதாகக் கூறி மல்லூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியதற்காக, சேலம் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 32 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...அவதூறு கருத்து: வரதராஜன் மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு