ETV Bharat / state

விடாமுயற்சி இருந்தால் சாதனை மகுடத்தில் அமரலாம்.. சேலம் இளைஞர் நம்பிக்கை..! - விவசாய குடும்பம்

சேலம்: பழங்குடியின மக்களின் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக இறுதிவரை பாடுபடுவேன் என இந்திய வன அலுவலர் தேர்வில் தேர்வாகியுள்ள செம்மாண்டப்பட்டி இளைஞர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

vengatesh
author img

By

Published : Aug 9, 2019, 6:15 AM IST

Updated : Aug 9, 2019, 9:59 AM IST

சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த செம்மாண்டபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மாணிக்கம் - லட்சுமி தம்பதி. இவர்களுக்கு தொடர்ச்சியாக ஏழு பெண் குழந்தைகள் பிறந்தால் சுற்றுவட்டாரத்தில் உள்ள கோயிலுக்கு எல்லாம் சென்று தவமிருந்து பிறந்தவர் தான் வெங்கடேஷ். வீட்டின் கடைசிப் பிள்ளையாக பிறந்ததால் ஏழு சகோதரிகளும் தம்பி மீது அளவு கடந்த பாசத்தை கொடுத்து அன்பாக வளர்த்தனர். சகோதரின் அன்பு மற்றும் பெற்றோரின் அரவணப்பில் வளர்ந்த வெங்கடேஷ், பள்ளிப்படிப்பை ஒமலூர் பகுதியில் படித்தார்.

பெற்றோருடன் விவசாய பணியில் ஈடுபட்டுள்ள வெங்கடேஷ்

விவசாய குடும்பத்தில் பிறந்த வெங்கடேஷூக்கு சிறுவயது முதல் வனத்தின் மீது இருந்த ஆர்வம் காரணமாக அது சார்ந்த படிப்பை தேர்வு செய்ய தூண்டியது. அதன்காரணமாக அவர் கோவை மாவட்டம், மேட்டுபாளையத்தில் உள்ள வனக்கல்லூரியில் இளங்கலை படிப்பை தொடர்ந்தார்.

இளங்கலை படிப்பை வெற்றிக்கரமாக முடித்த அவர் எளிதில் வனஅலுலவர் பதவியை பிடித்து விடவில்லை. சென்னைக்கு சென்று ஐந்து வருடமாக கடினமாக உழைத்து விடாமுயற்சியுடன் வனஅலுவலர் தேர்வை எழுதி அதில் இன்று வெற்றியும் கண்டு இந்திய அளவில் 58ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

விவசாய குடும்பத்தில் பிறந்து ஏழு சகோதரிகளின் பாசபிணைப்பில் வளர்ந்த வெங்கடேஷ் இன்று வனஅலுவலராக உயர்ந்து நிற்கிறார். இது சேலம் மாவட்டத்திற்கு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் பெருமையாகும்.

கால்நடைகளுடன் வெங்கடேஷ்
கால்நடைகளுடன் வெங்கடேஷ்

இதுகுறித்து சாதனை மாணவர் வெங்கடேஷ் கூறுகையில், "கிராமப் பின்னணியில் விவசாய குடும்பத்தில் எட்டாவது குழந்தையாக பிறந்த எனக்கு பெற்றோரும், சகோதரிகளும் மிகுந்த உற்சாகமும், ஊக்கமும் கொடுத்து வளர்த்தனர். அம்மா லட்சுமியும், அப்பா மாணிக்கமும் மிகுந்த சிரமப்பட்டு எனது கல்விக்காக தங்களின் வாழ்நாளையே அர்ப்பணித்து இருக்கிறார்கள். எனது வெற்றிக்கு அவர்கள் மிகுந்த உறுதுணையாக இருக்கிறார்கள்.

ஓமலூர் பகுதியில் பள்ளிக் கல்வியை முடித்தேன். அதன் பிறகு ஐஎஃப்எஸ் அலுவலராக வரவேண்டும் என்று திட்டமிட்டு, அதற்காக முறையான பயிற்சிகளை மேற்கொண்டேன்.மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியில் எனக்கு முன்னாள் படித்த சீனியர் மாணவர்கள் சரியான முறையில் வழிகாட்டுதல் செய்தனர்.

கிராமத்தில்பெற்றோருடன் வெங்கேடஷ்

அதன் அடிப்படையில் சென்னை சென்று வேறொரு நிறுவனத்தில் பகுதி நேர வேலை செய்து கொண்டே நான் ஐஎப்எஃஸ் அலுவலர் தேர்வுக்கு இடைவிடாமல் படித்தேன்.கடந்த ஆண்டு தேர்வை எழுதி வெற்றி பெற்றுஇந்திய அளவில் 58 வது இடம் பிடித்துள்ளேன்.

இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதனால் எனது குடும்பத்தினரும் கிராமத்தினரும், மிகுந்த சந்தோஷத்துடன் எனக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர் .திரிபுரா மாநிலத்தில் தற்போது இந்திய வனப் பணி அலுவலராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறேன்.

அங்குள்ள மலைவாழ் மக்களின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக பாடுபடுவேன்.அதுமட்டுமல்லாது வனம் இல்லையேல் நமது நாடு இல்லை என்பதை உணர்ந்து அதற்கு ஏற்ற வகையில் வனத்தை பாதுகாக்கும் வாழ்நாள் லட்சியம் நோக்கத்தோடு எனது பணியை திறம்பட செய்வேன்" என்றார்.

Intro:பழங்குடியின மக்களின் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக இறுதிவரை பாடுபடுவேன் என்று இந்திய வன பணி தேர்வில் வெற்றி பெற்று, திரிபுரா மாநிலத்தில் இந்திய வனப் பணி அதிகாரியாக பணிபுரிய தேர்வு செய்யப்பட்டுள்ள சேலம் இளைஞர் தெரிவித்திருக்கிறார்.

Body:சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த செம்மாண்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். ஏழு பெண் குழந்தைகளுக்கு பிறகு பிறந்தவர் வெங்கடேஷ் என்பதால் பெற்றோருக்கு மட்டுமல்லாது ஏழு சகோதரிகளின் செல்லமாகவும் வளர்ந்து, இன்று செம்மாண்டப்பட்டி கிராமத்தினர் கொண்டாடும் ஐஏஎஸ் அதிகாரியாக உயர்ந்து நிற்கிறார்.

தனது குடும்பம் விவசாய குடும்பம் என்பதால் சிறு வயது முதலே காடுகளின் மீது அதிக ஈர்ப்புக் கொண்டவராக வளர்ந்திருக்கிறார் வெங்கடேஷ் .

பள்ளி படிப்பை ஓமலூர் பகுதியில் முடித்துவிட்டு கோயமுத்தூர் மேட்டுப்பாளையத்தில் உள்ள வன கல்லூரியில் கடந்த 2010 ஆம் ஆண்டு சேர்ந்து அங்கே பட்டப் படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டு, இந்திய வனப் பணிக்கான தேர்வினை எழுத சென்னை சென்று ஐந்து ஆண்டுகளாக மனம் தளராமல் படித்து தற்போது ஐஎப்எஸ் அதிகாரி யாக உயர்ந்திருக்கிறார் வெங்கடேஷ்.

ஐஎப்எஸ் தேர்வை சென்ற ஆண்டு எழுதிய வெங்கடேஷ் இந்திய அளவில் 58ஆவது இடம் பிடித்து வெற்றி பெற்று தமிழகத்திற்கும் சேலம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறார்.

இந்த வெற்றி குறித்து இ டிவி பாரத் தமிழுக்காக வெங்கடேஷ் பிரத்தியேக பேட்டி அளித்துள்ளார் .

அதில் அவர் ,"கிராமப் பின்னணியில் விவசாய குடும்பத்தில் எட்டாவது குழந்தையாக பிறந்த எனக்கு பெற்றோரும் சகோதரிகளும் மிகுந்த உற்சாகமும் ஊக்கமும் கொடுத்து வளர்த்தனர்.

அம்மா லட்சுமியும் அப்பா மாணிக்கமும் மிகுந்த சிரமப்பட்டு எனது கல்விக்காக தங்களின் வாழ்நாளையே அர்ப்பணித்து இருக்கிறார்கள். எனது வெற்றிக்கு அவர்கள் மிகுந்த உறுதுணையாக இருக்கிறார்கள்.

ஓமலூர் பகுதியில் பள்ளிக் கல்வியை முடித்தேன். அதன் பிறகு ஐஎஃப்எஸ் அதிகாரியாக வரவேண்டும் என்று திட்டமிட்டு, அதற்காக முறையான பயிற்சிகளை மேற்கொண்டேன்.

மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியில் எனக்கு முன்னால் படித்த சீனியர் மாணவர்கள் சரியான முறையில் வழிகாட்டுதல் செய்தனர். அதன் அடிப்படையில் சென்னை சென்று வேறொரு நிறுவனத்தில் பகுதி நேர வேலை செய்து கொண்டே நான் ஐஎப்எஃஸ் அதிகாரி தேர்வுக்கு இடைவிடாமல் படித்தேன்.

கடந்த ஆண்டு தேர்வை எழுதி வெற்றி பெற்றேன். இந்திய அளவில் 58 வது இடம் கிடைத்துள்ளது.

இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதனால் எனது குடும்பத்தினரும் கிராமத்தினரும் மிகுந்த சந்தோஷத்துடன் எனக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர் .

திரிபுரா மாநிலத்தில் தற்போது இந்திய வனப் பணி அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறேன். அங்குள்ள மலைவாழ் மக்களின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக பாடுபடுவேன்.

அதுமட்டுமல்லாது வனம் இல்லையேல் நமது நாடு இல்லை என்பதை உணர்ந்து அதற்கு ஏற்ற வகையில் வனத்தை பாதுகாக்கும் வாழ்நாள் லட்சியம் நோக்கத்தோடு எனது பணியை திறம்பட செய்வேன்" என்று கூறினார்.

Conclusion:சேலம் மாவட்ட விவசாய குடும்பத்தில் பிறந்த இளைஞர் வட மாநிலம் ஒன்றில் வனப் பணி அதிகாரியாக பணியாற்ற தேர்வு செய்யப்பட்டுள்ளது சேலத்திற்கு கிடைத்த பெருமை என்றால் அது மிகையல்ல.
Last Updated : Aug 9, 2019, 9:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.