ETV Bharat / state

கர்நாடகாவைப்போல் தமிழ்நாடு, கேரளாவில் பாஜக ஆட்சி - தமிழ்நாடு பாஜக பொறுப்பாளர் சி.டி. ரவி நம்பிக்கை - தமிழ்நாடு பாஜக பொறுப்பாளர் ரவி

கர்நாடகா மாநிலத்தைப்போல் தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில், பாஜக நிச்சயம் ஆட்சி அமைக்கும் என அக்கட்சி மாநில பொறுப்பாளர் சி.டி. ரவி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மிழ்நாடு பாஜக பொறுப்பாளர் சி.டி. ரவி
மிழ்நாடு பாஜக பொறுப்பாளர் சி.டி. ரவி
author img

By

Published : Dec 15, 2020, 8:46 PM IST

சேலம்: பாஜகவின் மாவட்ட, மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று (டிசம்பர் 15) சேலத்தில் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி கூறுகையில், " மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்க பாஜக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்டங்கள் வாயிலாக நாடு முழுவதும் பல புதிய சந்தைகள் உருவாகும். இந்த சட்டங்களின் ஒட்டுமொத்த நன்மை மற்றும் பலன்கள் விவசாயிகளை சென்றடைய மத்திய அரசு துணை நிற்கும். ஆனால் எதிர்க்கட்சிகள் இடைத்தரகர்களுக்கு மட்டுமே துணை நின்று போராட்டங்களை நடத்தி வருகின்றன. மத்திய வேளாண் சட்டங்களால் குறைந்தபட்ச ஆதார விலை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பாஜக பொறுப்பாளர் சி.டி. ரவி செய்தியாளர் சந்திப்பு

விவசாயிகளின் பயிருக்கு மட்டுமே ஒப்பந்தம் போடப்படும் என்பதையும், நிலத்திற்கு ஒப்பந்தம் போடப்படாது என்பதையும் இந்த புதிய சட்டம் உறுதி செய்துள்ளது. மத்திய அரசு, வேளாண்மை சட்டங்கள் கொண்டு வந்த பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் வெற்றி பெற்று உள்ளதுபோல தமிழ்நாட்டிலும் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் . கர்நாடகாவில் ஆட்சியை பிடித்ததுபோல கேரளாவிலும் பாஜக நிச்சயம் ஆட்சியை பிடிக்கும். தமிழ்நாட்டிலுள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பாஜகவை வலுப்படுத்தி வருகிறோம் . பூத் கமிட்டி அமைக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளோம்.

நடிகைகள் குஷ்பு, விஜயசாந்தி, முன்னாள் எம்.பி. ராமலிங்கம், எம்.எல்.ஏ. கு.க. செல்வம் போன்றோர் பாஜகவில் இணைந்துள்ளனர். அவர்களைப்போல பல்வேறு முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்களும் பாஜகவில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறோம். மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள வளர்ச்சி பணிகளை முன்வைத்து கன்னியாகுமரி தேர்தலில் பாஜக பணியாற்றும். மக்கள் நிச்சயம் எங்களுக்கு வாக்களிப்பார்கள்" என்றார்.

இதையும் படிங்க: 'ஈகோவை விட்டுவிட்டு ரஜினியுடன் இணைந்து செயல்படத் தயார்'- கமல் ஹாசன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.