ETV Bharat / state

திருமணிமுத்தாற்றை மீட்டெடுக்க பாஜக சார்பில் கோரிக்கை - குடிமராமத்து

சேலம்: திருமணிமுத்தாற்றின் ஏரிகளில் குடிமராமத்துப் பணிகள் செய்தால் மட்டுமே மாவட்டத்தின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்ய முடியும் என கோரி பாஜக மனு அளித்துள்ளது.

thirumanimutharu
author img

By

Published : Aug 11, 2019, 3:47 AM IST

காவிரியின் துணை நதியான திருமணிமுத்தாறை மீட்டெடுக்க வேண்டும் என தேசிய பேரிடர் மேலாண்மை குழுவின் தலைவரும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் திட்டம் மற்றும் கொள்கை இணைச்செயலாளருமான வெ.திருப்புகழை சந்தித்து பாஜக சார்பில் கோரிக்கை மனுவை வழங்கினர்.

இதுதொடர்பாக, பாஜக மாநகர மாவட்ட தலைவர் ஆர்.பி.கோபிநாத் உள்ளிட்டோர் அளித்த மனுவில், 'சேலம் மாவட்டத்தில் திருமணிமுத்தாறு, காவிரி ஆற்றின் துணைநதியான ஒரு வற்றாத ஜீவநதியாக சேலம், நாமக்கல் மாவட்டங்களில் பாய்ந்தோடி, வீட்டிற்கும், விவசாயத்திற்கும் தொழிற்சாலைத் தேவைகளுக்கும் கடந்த 1960வரை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

சுமார் 120கிலோமீட்டர் தூரம் பயணித்து, நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி, வேலூரில் நன்செய் இடையாறு எனும் இடத்தில் திருமணிமுத்தாறு காவிரியுடன் கலக்கிறது. பொன்னி ஆறு, கன்னிமார் ஓடை, வறட்டாறு, ஏளுர் ஆறு, ராஜவாய்க்கால் ஆகியவை திருமணிமுத்தாற்றின் கிளை ஆறுகளாகும்.

திருமணிமுத்தாறு தற்போது மாசுபட்டும், குடியிருப்புகளால் ஆக்கிரமிக்கப்பட்டும் ஆற்றின் வழிப்பாதைகள் விவசாய நிலங்களாகவும், மாநகராட்சி கழிவு நீரும், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் அனைத்தும் ஆற்றிலிருந்து ஓடிவரும் ஓடைகளில் விடப்பட்டு, வெளியேற்றும் தலமாக மாறிவிட்டது.

காவிரி-கோதாவரி நதிநீர் திட்டம், மேட்டூர் உபரிநீர் திட்டம் என நீர் மேலாண்மைத் திட்டங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் முக்கியத்துவம் தந்து வருகின்றன. திருமணிமுத்தாறை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை சேலத்தில் வலுத்துள்ளது.

பிரதான ஏரிகளான கன்னங்குறிச்சி, பொன்னி ஆறு, வறட்டாறு, வலசையூர், அயோத்தியாபட்டணம், பனமரத்துப்பட்டி, வெண்ணந்தூர், வீரபாண்டி, மல்லசமுத்திரம் என பிரித்து நீர்மேலாண்மையை மேற்கொள்ளலாம். இந்த ஆறு பாய்ந்தோடும் வழிப்பாதையைக் கண்டறிந்து, அதைத் தூர்வாரி, ஆழப்படுத்தி, அகலப்படுத்தி குடிமராமத்துப் பணிகள் செய்தால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது.

இதற்கு அந்த ஆறு பாயும் வழிப்பாதையில் நில ஆக்ரமிப்பு இருந்தால், அதை உடனே அகற்றி நீர் ஆதாரத்தை மேன்மைப்படுத்திட வேண்டும். பாஜக அரசு, நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் தந்து வருகிறது. பிரதமரின் முதன்மைத் திட்டமாக உள்ள ஜல்சக்தி திட்டத்தை கிராம, நகர அளவில் மக்கள் இயக்கமாக மாற்றிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஏற்கெனவே, மேட்டூர் உபரி நீரை ரூ.565கோடி மதிப்பில் சேலம் மாவட்டத்தில் எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர், மேட்டூர் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் வரும் நூறு ஏரிகளில் நிரப்பத் திட்டமிடப்பட்டுள்ளது.

சேலம், நாமக்கல் மாவட்டத்தில் நீர் ஆதாரமாக விளங்கி வந்த திருமணிமுத்தாறு தற்போது சூழல் சீர்கேட்டால் மாசடைந்து, கழிவுநீர்க் கால்வாயாக மாறிவிட்டது. எனவே, நீர் மேலாண்மைத் திட்டத்தில் திருமணிமுத்தாறை மீட்டெடுத்து, செயல்படுத்திட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

திருமணிமுத்தாறு குறித்த வரைபடங்கள்

மேலும் திருமணிமுத்தாறு மேல் வடிநிலம் குறித்த ஆய்வில், முனைவர் பட்டம் பெற்றவரும், சேலம் அரசுக் கல்லூரியில் புவியியல் துறை பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவருமான சி.மணிமொழி, திருமணிமுத்தாறு மீட்டெடுப்பது குறித்து விரிவாக தனது ஆய்வுக் கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

திருமணிமுத்தாற்றின் வடிநிலத்திலுள்ள ஏரிகளைக் கணக்கில் எடுத்து குடிமராமத்துப் பணிகள் செய்தால் மட்டுமே, சேலம் மாவட்டத்தின் குடிநீர் தேவையும், விவசாயத் தேவையும், ஓரளவுக்குத் தன்னிறைவு அடையும் என்பதால், இந்த கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும்' என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Intro:சேலம் திருமணிமுத்தாறை மீட்டெடுக்க வலியுறுத்தி பாஜக மனு சார்பில் இன்று தேசிய பேரிடர் மேலாண்மை குழுவின் தலைவர் திருப்புகழிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.Body:
காவிரியின் துணை நதியான திருமணிமுத்தாறை மீட்டெடுக்க வேண்டும் என தேசிய பேரிடர் மேலாண்மை குழுவின் தலைவரும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் திட்டம் மற்றும் கொள்கை இணைச் செயலாளருமான வெ.திருப்புகழை நேரில் சந்துத்து பாஜகவினர் கோரிக்கை மனுவை வழங்கினர்.

இதுதொடர்பாக, பாஜக மாநகர மாவட்ட தலைவர் ஆர்.பி.கோபிநாத் உள்ளிட்டோர் அளித்த மனுவில், '
சேலம் மாவட்டம் சேர்வராயன்மலையில் உற்பத்தியாகி, மஞ்சவாடி கணவாய் வழியாக சேலத்துக்கு வடக்கேயும் வடகிழக்கிலும் பாய்கிறது திருமணிமுத்தாறு.

திருமணிமுத்தாறு,
காவிரி ஆற்றின் துணை நதியான ஒரு வற்றாத ஜீவநதியாக சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் பாய்ந்தோடி, வீட்டிற்கும், விவசாயத்திற்கும் தொழிற்சாலைத் தேவைகளுக்கும் 1960 வரை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

சுமார் 120 கிலோமீட்டர் தூரம் பயணித்து, நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி வேலூரில் நன்செய் இடையாறு எனும் இடத்தில் திருமணிமுத்தாறு காவிரியுடன் கலக்கிறது.

பொன்னி ஆறு, கன்னிமார் ஓடை, வறட்டாறு, ஏளுர் ஆறு, ராஜவாய்க்கால் ஆகியவை திருமணிமுத்தாற்றின் கிளை ஆறுகளாகும்.

திருமணிமுத்தாறு தற்போது மாசுபட்டும், குடியிருப்புகளால் ஆக்கிரமிக்கப்பட்டும் ஆற்றின் வழிப் பாதைகள் விவசாய நிலங்களாகவும், மாநகராட்சி கழிவு நீரும், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றறப்படும் கழிவுகள் அனைத்தும் ஆற்றிலிருந்து ஓடிவரும் ஓடைகளில் விடப்பட்டு, வெளியேற்றும் தலமாக மாறிவிட்டது.

காவிரி - கோதாவரி நதிநீர் திட்டம், மேட்டூர் உபரி நீர் திட்டம் என நீர் மேலாண்மைத் திட்டங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் முக்கியத்துவம் தந்து வருகின்றன.

திருமணிமுத்தாறை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை சேலத்தில் வலுத்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் பிரதான ஏரிகளான கன்னங்குறிச்சி, பொன்னி ஆறு, வறட்டாறு, வலசையூர், அயோத்தியாபட்டணம், பனமரத்துப்பட்டி, வெண்ணந்தூர், வீரபாண்டி, மல்லசமுத்திரம் என பிரித்து நீர் மேலாண்மையை மேற்கொள்ளலாம்.

இந்த ஆறு பாய்ந்தோடும் வழிப்பாதையைக் கண்டறிந்து, அதைத் தூர்வாரி, ஆழப்படுத்தி, அகலப்படுத்தி குடிமராமத்துப் பணிகள் செய்தால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது.

இதற்கு அந்த ஆறு பாயும் வழிப் பாதையில் நில ஆக்ரமிப்பு இருந்தால், அதை உடனே அகற்றி நீர் ஆதாரத்தை மேன்மைப்படுத்திட வேண்டும்.

பாஜக அரசு, நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் தந்து வருகிறது. பிரதமரின் முதன்மைத் திட்டமாக உள்ள ஜல்சக்தி திட்டத்தை கிராம, நகர அளவில் மக்கள் இயக்கமாக மாற்றிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஏற்கெனவே, மேட்டூர் உபரி நீரை ரூ.565 கோடி மதிப்பில் சேலம் மாவட்டத்தில் எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர், மேட்டூர் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் வரும் 100 ஏரிகளில் நிரப்பத் திட்டமிடப்பட்டுள்ளது.

சேலம், நாமக்கல் மாவட்டத்தில் நீர் ஆதாரமாக விளங்கி வந்த திருமணிமுத்தாறு தற்போது சூழல் சீர்கேட்டால் மாசடைந்து, கழிவு நீர்க் கால்வாயாக மாறிவிட்டது.

எனவே, நீர் மேலாண்மைத் திட்டத்தில் திருமணிமுத்தாறை மீட்டெடுத்து, செயல்படுத்திட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

மேலும் திருமணிமுத்தாறு மேல் வடிநிலம் குறித்த ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றவரும், சேலம் அரசுக் கல்லூரியில் புவியியல் துறை பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவருமான சி.மணிமொழி, திருமணிமுத்தாறு மீட்டெடுப்பது குறித்து விரிவாக தனது ஆய்வுக் கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

Conclusion:
திருமணிமுத்தாற்றின் வடிநிலத்திலுள்ள ஏரிகளைக் கணக்கில் எடுத்து குடிமராமத்துப் பணிகள் செய்தால் மட்டுமே சேலம் மாவட்டத்தின் குடிநீர் தேவையும், விவசாயத் தேவையும், ஓரளவுக்குத் தன்னிறைவு அடையும் என்பதால், இந்த கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.