சேலம் வன கோட்டத்திற்கு உட்பட்ட ஏற்காடு ஆத்தூர் ஓமலூர் மேட்டூர் டேனிஷ்பேட்டை மற்றும் தெற்கு வனச்சரக பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சி கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் உட்பட 150 பேர் 16 குழுக்களாக பிரிந்து இந்த கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டனர்.
இந்த கணக்கெடுப்பின் மூலமாக சேலம் வன கோட்ட பகுதிகளில் 214 பறவை இனங்கள் மற்றும்136 பட்டாம்பூச்சி இனங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், அரியவகையாக ஒரு பறவை இனம் மற்றும் 4 வகை பட்டாம்பூச்சி இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வின் முடிவில் கூறப்பட்டுள்ளது.
இதே கணக்கெடுப்பானது கடந்த 2018ஆம் ஆண்டு நடத்தப்பட்டபோது 276 பறவை இனங்களும் 76 பட்டாம்பூச்சி இனங்கள் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்: குட்டிகளுடன் கம்பீரமாக நடந்து வந்த புலி - கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள்