ETV Bharat / state

7,300 கி.மீ. சைக்கிளில் பயணித்து சேலம் வந்த போபால் வீராங்கனை

உலக அளவில் பெண்களுக்கு பாதுகாப்பை வழங்குவதில் முதன்மை நாடு இந்தியா என்பதை எடுத்துக்காட்டும் வகையில், சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுவரும் ஆஷா மால்வியா சேலம் வந்தடைந்தார்.

சைக்கிள் ரைடு செல்லும் போபால் வீராங்கனை சேலம் வருகை!

author img

By

Published : Jan 10, 2023, 6:58 AM IST

சேலம்: மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் இருந்து கடந்த நவம்பர் 1ஆம் தேதி, மிதிவண்டி பயணத்தை தொடங்கிய மலையேற்ற வீராங்கனை ஆசா மால்வியா(24), 100 நாட்களில், 7,300 கிலோமீட்டரை கடந்து நேற்று (ஜன.9) சேலம் வந்தடைந்தார். அவரை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வரவேற்றார்.

சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ளும் ஆஷா மால்வியா சேலம் வருகை

அதன்பின் சேலத்தில் இருந்து புறப்பட்ட ஆஷா மால்வியா, தர்மபுரி செல்கிறார். தொடர்ந்து தர்மபுரி - சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக ஹைதராபாத் செல்ல உள்ளார். இதுகுறித்து ஆஷா மால்வியா கூறுகையில், “நவ.1ஆம் தேதி போபாலில் மிதிவண்டி விழிப்புணர்வு பயணத்தை தொடங்கினேன்.

இதுவரை மத்தியபிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு என்று 7 மாநிலங்களைக் கடந்துள்ளேன். 100 நாட்களில் 7,300 கிலோமீட்டர் பயணித்திருக்கிறேன். 252 நாட்களில் 25,000 கிலோமீட்டர் பயணித்து, பெண்கள் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டை விளக்கும் வகையில் எனது பயணம் அமைந்துள்ளது.

கர்நாடகா, கேரளா முதலமைச்சர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற நான், தமிழ்நாட்டிலும் அமைச்சர்களை சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறேன். தமிழ்நாட்டை பொறுத்தவரை எனக்கு நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாட்டை பொறுத்தவரை, பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் சிறந்த மாநிலமாக உள்ளது.

எனது 3ஆவது வயதிலே தந்தையை இழந்துவிட்டேன். கூலி வேலை செய்த தாய், என்னை முதுகலை பட்டப்படிப்பு வரை படிக்க வைத்துள்ளளார். இந்த நிலையில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற ஆசையில், தற்போது சைக்கிள் பயணத்தில் ஈடுபட்டு வருகிறேன்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: வாடகை வீட்டிற்கு இரவு தாமதமாக வந்த நபர்; துப்பாக்கியால் சுட்ட வீட்டு உரிமையாளர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.