சேலம் மாவட்டம் கருமந்துறை பட்டிமேடு மலை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி அண்ணாமலை. இவர் தனது தோட்டத்தில் விவசாயம் செய்து கொண்டிருந்தபோது குரங்குகள் பயிர்களை சேதப்படுத்தியது.
இதனால் விவசாயி கற்களை எறிந்து குரங்குகளை விரட்டினார். அவர் வீசிய கற்கள் புதரில் இருந்த கரடி மீது விழுந்துள்ளது. இதனால் அத்திரமடைந்த கரடி, அண்ணாமலையை விரட்டி பிடித்து சுமார் 50 அடி தூரத்திற்கு இழுத்துச்சென்று கடுமையாக கடித்துக் குதறியது. கரடியின் பிடியில் தவித்த அண்ணாமலை எழுப்பிய அலறல் சத்தம் கேட்ட மனைவி பழனியம்மாள், தங்களது ஐந்து வளர்ப்பு நாய்களுடன் சென்று, அவரை மீட்டுள்ளார்.
இதனையடுத்து அண்ணாமலையை அக்கம் பக்கத்தினர் உதவியோடு, பழனியம்மாள் அவரை சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து ஆத்தூர் வனத்துறை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப் பகலில் விவசாயியை கரடி கடித்து குதறிய சம்பவம் கருமந்துறை பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நடைப்பயிற்சி சென்ற பெண்களிடம் நகைப்பறிப்பு - இருவர் கைது!