சேலம் மாநகரப் பகுதிகளில் குற்றச் சம்பவங்களைக் குறைப்பதற்காக, சேலம் மாநகர் முழுவதும் உள்ள ரவுடிகளை கைது செய்ய சேலம் மாநகர ஆணையர் சங்கர் உத்திரவிட்டார்.
இந்த உத்திரவின் பேரில் அஸ்தம்பட்டி, கிச்சிப்பாளையம், கொண்டலாம்பட்டி, சூரமங்கலம், இரும்பாலை முதலிய பகுதிகளில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 35 ரவுடிகளையும், கிச்சிப்பாளையம் பகுதியிலிருந்து 13 ரவுடிகளையும் காவல் ஆய்வாளர் ராஜா சோமசுந்தரம் தலைமையில் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
இதேபோல், கடந்த ஆறு மாதங்களில், சேலம் மாநகரத்தில் 200க்கும் மேற்பட்ட ரவுடிகளை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.