தீபாவளி பண்டிகை நாள்களில் சிறப்பு நிகழ்வுகளில் புதுப்படங்கள் வெளியிடுவது வழக்கம். கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஏழு மாதங்களாக நாடு முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில், சென்ற மாதம் தளர்வுகள் அறிவித்ததைத் தொடர்ந்து திரையரங்குகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால் புதிய படங்கள் வெளியாவதற்கு பல சிக்கல்கள் இருந்தவந்த நிலையில், மூன்று படங்கள் இன்று (நவ.14) திரையிடப்பட்டன. பிஸ்கோத், தட்றோம் தூக்கறோம், இரண்டாம் குத்து உள்ளிட்ட படங்கள் இன்று வெளியாகியுள்ளன. ஆனால் பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் இன்று வெளியாகததால் பெரிய வரவேற்பு இல்லாத சூழ்நிலை உருவாகி வருகிறது.
திரையரங்குகளில் இரு இருக்கைக்கு ஒருவர் அனுமதிக்கப்படுகிறார். மேலும் வெப்ப சோதனை, கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்த பின்னரே அனுமதி வழங்கப்படுகிறது.
சேலம் ஏஆர்ஆர்எஸ் மல்டிப்ளெக்ஸ், சங்கீத், சுப்ரகீத், எம்.எஸ்.ராஜேஷ்வரி, அலங்கார், கௌரி உள்ளிட்ட திரையரங்குகள் தற்போது படங்களை திரையிட்டு வருகி்ன்றன.
![new_films](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-slm-02-new-films-release-script-photo-tn10031_14112020130516_1411f_00631_674.jpg)