ETV Bharat / state

அமமுகவை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யக்கூடாது - புகழேந்தி வழக்கு!

author img

By

Published : Nov 30, 2019, 11:02 AM IST

சேலம்: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யக்கூடாது என்று வழக்கு தொடரப்பட்டு உள்ளதாக அக்கட்சியின் முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி சேலத்தில் தெரிவித்துள்ளார்.

ammk party pugalendhi  அமமுக பெங்களூர் புகழேந்தி  அமமுக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதில் சிக்கல்  சேலம் மாவட்டச் செய்திகள்  டிடிவி தினகரன்  ammk bangalore pugalendhi filed case  ttv dinakaran டிடிவி தினகரன்
அமமுகவை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யக்கூடாது - பெங்களூர் புகழேந்தி வழக்கு

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமமுகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி, "டிடிவி தினகரன் ஒரு மோசடிப் பேர்வழி. கட்சி நிர்வாகிகளுக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார். சேலத்தில் இருந்து மட்டும் 200கோடி ரூபாய் கடந்த மக்களவைத் தேர்தலின் போது அமமுகவிற்கு கைமாறி உள்ளது.

அவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்று டிடிவி தினகரன் கூற வேண்டும். இல்லையென்றால் அது தொடர்பான முக்கிய ஆவணங்களை நான் வெளியிடுவேன். மக்களவைத் தேர்தலின் போது, கட்சியின் வளர்ச்சிக்காக என்னால் முடிந்த பணத்தை கொடுத்திருக்கிறேன்.

என்னுடைய ஆடிட்டரிடம் கூட ஐந்து கோடி ரூபாயை தினகரன் கேட்டார். அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. தற்பொழுது ஆர்கே நகர் தொகுதியில் தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் நின்றால் பத்தாயிரம் வாக்குகள் கூட வாங்க மாட்டார்.

அமமுகவை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யக்கூடாது - பெங்களூர் புகழேந்தி வழக்கு

அமமுகவை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யக்கூடாது என்று வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமமுகவை அதிமுகவுடன் இணைப்பதற்கான முயற்சியை எடுத்து வருகிறோம். வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றி பெரும். மக்கள் அதிமுகவின் மீது பெரும் மதிப்பு வைத்திருக்கின்றனர் " என்றார்.

இதையும் படிங்க: ஆண்டிமடம் காவல் நிலையம் தாக்கப்பட்ட வழக்கு - குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் சிறை!

Intro:அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யக்கூடாது என்று வழக்கு தொடரப்பட்டு உள்ளதாக அக்கட்சியின் முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி சேலத்தில் தெரிவித்துள்ளார்.

Body:சேலத்தில் இன்று செய்தியாளர்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் செய்தியைக் தொடர்பாளர் புகழேந்தி பேட்டியளித்தார் . அப்போது அவர் கூறுகையில்," டிடிவி தினகரன் ஒரு மோசடிப் பேர்வழி . கட்சி நிர்வாகிகளுக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் .

நான் அவரிடம் பணம் கேட்டு என்றுமே நாடியது இல்லை . அவரின் கட்சியில் சேலத்தில் மட்டும் 200 கோடி ரூபாய் நாடாளுமன்ற தேர்தலின்போது கைமாறி உள்ளதாக எனக்கு உறுதியான தகவல் கிடைத்துள்ளது.

அவ்வளவு பணம் அவருக்கு எங்கிருந்து வந்தது என்று அவர் கூற வேண்டும் . இல்லை என்றால் அது தொடர்பான முக்கிய ஆவணங்களை நான் வெளியிடுவேன்.

என்னிடம் ஆதாரம் இருக்கிறது . தமிழகத்தில் இனிமேல் தினகரன் கட்சி நடத்த முடியாது. நாடாளுமன்றத் தேர்தலுக்காக நானும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சி வளர்ச்சிக்காக பணம் முடிந்த அளவு கொடுத்திருக்கிறேன்.

என்னிடம் இருக்கும் ஆடிட்டரிடம்கூட 5 கோடி ரூபாய் தினகரன் கேட்டார் . அதற்கான ஆதாரம் இருக்கிறது என்னிடம்.

பணம் கேட்டு பிச்சை எடுப்பவன் நான் அல்ல. தற்பொழுது ஆர் கே நகர் தொகுதியில் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் அவர் தேர்தலில் நிற்கத் தயாரா?

அப்படி நின்றால் பத்தாயிரம் வாக்குகள் கூட பெறமாட்டார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை அதிமுக உடன் இணைக்க முயற்சி செய்து வருகிறோம்.

அந்த அதில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் இருந்தால் அவரை அதிமுகவில் இணைக்க கூடாது என்று அவரே முதல்வரே கூறியிருக்கிறார் .

உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று ஸ்டாலின் பலமுறை பேட்டி கொடுத்திருந்தார். தற்போது உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் வராது என்று பேட்டி அளிப்பது, உள்ளாட்சித் தேர்தலை கண்டு அவர் பயப்படுவதை காட்டுகிறது" என்று தெரிவித்தார்.

Conclusion:மேலும் புகழேந்தி கூறுகையில்,| வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும். பொங்கல் பரிசு வழங்குவதை முழுமையாக வரவேற்கிறோம்.

அதனால் மக்கள் ஓட்டு போடுவார்கள் என்பதெல்லாம் தவறான பிரச்சாரம். பொதுமக்கள் அதிமுகவின் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள் .அதனால் வெற்றிபெற வைப்பார்கள்" என்றும் கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.