தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமும் அமெரிக்காவின் கார்னல் பல்கலைக்கழகமும் இணைந்து உலக வேளாண்மை மற்றும் கிராம மேம்பாடு என்ற தலைப்பில் கல்வித் திட்டத்தினை செயல்படுத்திவருகிறது.
இந்நிலையில் அமெரிக்கா கார்னல் பல்கலைக்கழகத்தில் பயிலும் 53 மாணவர்கள் தமிழ்நாட்டில் உள்ள சென்னை, உதகை, சேலம், பொள்ளாச்சி போன்ற இடங்களில் ஊரக மேம்பாடு மற்றும் உணவு மதிப்புக் கூட்டல் குறித்து ஆய்வுமேற்கொண்டு-வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக அமெரிக்கா மாணவர்கள் சேலம் சூரமங்கலத்தில் உள்ள உழவர் சந்தையில் விவசாயப் பொருள்கள் விற்பனை குறித்தும், விவசாயிகள் விளைவிப்பது குறித்தும் ஆய்வுமேற்கொண்டு அவர்களிடம் கேட்டறிந்தனர். அமெரிக்கா மாணவர்களுடன் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:கருங்குழி பேரூராட்சியில் சுகாதாரத் திருவிழா