ETV Bharat / state

சேலத்தில் பெண் வியாபாரிகளை தாக்கிய அதிமுக பிரமுகர்!

author img

By

Published : Nov 22, 2020, 8:55 PM IST

சேலம்: புதிய பேருந்து நிலையம் அருகே சாலையோரம் கடை நடத்தி வரும் பெண் வியாபாரிகளை அதிமுக பிரமுகர் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

AIADMK leader attacks female traders in Salem

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பூ, பழம் உள்ளிட்ட பொருள்களை சாலையோரம் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். புதிய பேருந்து நிலையத்தில் கடைகள் மற்றும் சைக்கிள் ஸ்டாண்ட் ஆகியவற்றை குத்தகைக்கு எடுத்துள்ள அதிமுக பிரமுகர் இளங்கோவன் என்பவர், சாலையோரம் கடைகள் நடத்தி வரும் பெண்களை நாள்தோறும் பல்வேறு வகையில் அச்சுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் தனது அடியாட்கள் மூலம் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பொருள்களை சாலையில் எறிவது, பெண்களை தரக்குறைவாக பேசுவது போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், இன்று (நவம்பர் 22) புதிய பேருந்து நிலையத்தில் பெண்கள் சிலர் பழ வியாபாரம் செய்து கொண்டிருந்த போது, அங்கு வந்த இளங்கோவன் மற்றும் அவரது அடியாட்கள் 10க்கும் மேற்பட்டோர் அங்கிருந்த பெண்களை கடுமையாக தாக்கி, அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த பழம், பூ உள்ளிட்டவற்றை சாலையில் வீசி எறிந்தனர்.

இளங்கோவன் தாக்கியதில் சேலம் வீராணம் பகுதியைச் சேர்ந்த விஜயா என்ற பெண் பலத்த காயமடைந்து கீழே விழுந்தார். இதையடுத்து அங்கிருந்த வியாபாரிகள் அவரை உடனடியாக மீட்டு, சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

சேலத்தில் பெண் வியாபாரிகளை தாக்கிய அதிமுக பிரமுகர்

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட வியாபாரிகள் கூறுகையில், "இளங்கோவன், ஆளும் கட்சியை சேர்ந்த நபர் என்பதால் எங்களை மிரட்டி கடுமையாக தாக்கி வருகிறார். பெண்கள் என்றும் பாராமல் ஆபாச வார்த்தைகளால் பேசுவதும், எங்களின் உடைகளை கிழித்து எறிவதும் போன்ற பல்வேறு விரும்பத்தகாத செயல்களை செய்து வருகிறார்.

அவர் மீது புகாரளித்தாலும், ஆளுங்கட்சி என்பதால் காவல்துறையினர் புகாரை ஏற்க மறுகின்றனர். எனவே தமிழ்நாடு அரசு உடனடியாக இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:தோட்ட வேலை செய்த சிறுமிகளிடம் பாலியல் வன்கொடுமை... ஒருவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.