ETV Bharat / state

'ஆளுநருக்கு அதிமுக அரசு பயப்படுகிறது' - நெல்லை முபாரக் - governor banwarilal Nellai Mubarak

சேலம்: ராஜீவ் காந்திக் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்யும் விவகாரத்தில் ஆளுநருக்கு பயந்து அதிமுக அரசு செயல்படுவதாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

SDPI president Nellai Mubarak
நெல்லை முபாரக்
author img

By

Published : Mar 6, 2020, 6:14 PM IST

சேலத்தில் நடைபெற்றுவரும் இஸ்லாமிய அமைப்பினரின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான தொடர் போராட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக் பங்கேற்றார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” குடியுரிமை திருத்தச் சட்டத்தை நடைமுறைபடுத்த மாட்டோம் என கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநில அரசுகள் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதை போன்று தமிழ்நாட்டிலும் அதிமுக அரசு நிறைவேற்ற வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் டெல்லியில் பலர் உயிரிழந்ததற்கு காரணமான கலவரக்காரர்களோடு சேர்ந்து செயல்பட்ட காவல் துறையினர் அனைவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்ததற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடியும் பதவி விலக வேண்டும். சட்டத்தை திரும்பப் பெறும்வரை இஸ்லாமியர்களின் போராட்டம் தொடரும்.

சென்னை பல்கலைக்கழத்தின் துணை வேந்தர் தேடுதல் குழுவின் தலைவராக ஜேஎன்யூ துணை வேந்தர் சங் பரிவாரின் கைகூலியாக இருக்கும் ஜெகதீஷ் குமாரை ஆளுநர் நியமனம் கண்டனத்திற்குரியது. ஆளுநர் பன்வாரிலால் தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்படுகிறார்.

இதேபோல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஏழு பேரை விடுதலை செய்யாததால் ஆளுநரை தமிழ்நாடு மக்கள் புறக்கணிக்க வேண்டும். ஆளுநருக்கு தமிழ்நாடு அரசு பயப்படுகிறது” என்றார்.

நெல்லை முபாரக் பேட்டி

இதையும் படிங்க: ’வேந்தர் பதவியைப் பயன்படுத்தி பாஜகவின் காவிமயக் கொள்கையைப் புகுத்தும் ஆளுநர்’ - ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.