ETV Bharat / state

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவைத்த முதலமைச்சர்! - Chief Minister Edappadi Palanisamy

சேலம்: மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீர் திறந்துவைத்தார்.

-mettur-dam-
-mettur-dam-
author img

By

Published : Jun 12, 2020, 10:32 AM IST

Updated : Jun 12, 2020, 11:41 AM IST

தமிழ்நாட்டின் முக்கிய நீர்த்தேக்கமான மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் காவிரி டெல்டா மாவட்டங்கள் உள்பட மொத்தம் 12 மாவட்டங்களின் பாசனத்துக்கு நீராதாரமாக உள்ளது.

அதில் டெல்டா மாவட்ட விளைநிலங்களின் குறுவை சாகுபடிக்காக பொதுப்பணித் துறை சார்பாக மேட்டூர் அணையிலிருந்து ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த எட்டு ஆண்டுகளாக மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் அந்தக் குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறப்பில் தாமதம் ஏற்பட்டுவந்தது.

இந்த நிலையில் இந்தாண்டு மேட்டூர் அணையில் தற்போது 101.72 அடி நீர்மட்டம் உள்ளதால் இன்று (ஜூன் 12) திறக்கப்பட்டது. அதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

தண்ணீர் திறந்துவைத்த முதலமைச்சர்

உரிய நேரத்தில் டெல்டா விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் இன்றைய நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 1,439 கனஅடி வீதம் தண்ணீர் வரத்து உள்ளது.

குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் நீர் இருப்பு 67.08 டிஎம்சியாக உள்ளது.

இதையும் படிங்க: சேலம் புதிய ஈரடுக்கு மேம்பாலத்தை முதலமைச்சர் நாளை திறந்து வைப்பு

Last Updated : Jun 12, 2020, 11:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.