ETV Bharat / state

சேலத்தில் அதிமுக சார்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கல் - அதிமுக சார்பில் வழங்கப்பட்ட நிவாரணப் பொருள்கள்

சேலம்: ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் சேலம் மாவட்ட அதிமுக சார்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

admk-members-given-relief-for-disabled-persons-in-salem

author img

By

Published : May 1, 2020, 2:27 PM IST

கரோனோ நோய்த்தொற்று பொதுமக்களிடையே பரவுவதைத் தடுக்கும்விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவு காரணமாக ஏழை எளியவர்கள், கூலித் தொழிலாளர்கள் பலர் வேலையிழந்து உணவின்றித் தவித்துவருகின்றனர்.

இதனையடுத்து, அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் உத்தரவின்பேரில் அக்கட்சியினர் சார்பில் மாநிலம் முழுவதும் தூய்மைப் பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டுவருகின்றன.

அந்த வகையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் அதிமுக சார்பில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருள்கள் நிவாரணமாக வழங்கப்பட்டன.

அதிமுக சார்பில் வழங்கப்பட்ட நிவாரணப் பொருள்கள்

சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினரும் அதிமுக மாநகர மாவட்டச் செயலாளருமான வெங்கடாசலம் ஆகியோர் கலந்துகொண்டு நிவாரணப் பொருள்களை பயனாளிகளுக்கு வழங்கினர். இந்த நிகழ்வில் சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் கலந்துகொண்டார்.

இதையும் பார்க்க:ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரணம் வழங்கிய அன்பில் மகேஷ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.